மருத்துவமும் உணவும்
中国国际广播电台

பண்டை காலத்தில், சீன மக்கள் இயற்கை மூலிகைகளைக் கொண்டு, தனிச்சிறப்பு வாய்ந்த சீனாவின் பாரம்பரிய மருத்துகளை உருவாக்கியுள்ளனர். இது, மக்களின் உணவுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. மருந்து உணவாகவும், உணவு மருந்தாகவும் மாறுகின்றன.

சேள வமிச காலத்தில் (கி.மு.1046-கி.மு.256), இந்த பாரம்பரியம், மருத்துவ மற்றும் உணவு அமைப்பில் பிரதிபலித்தன. சீனாவின் பண்டைய நூல்களில், இது பற்றிய குறிப்புக்கள் அதிகமாக உள்ளன. தாங் வமிச காலத்தின் புகழ்பெற்ற மருத்துவ அறிஞர் சுன் சிமியேள எழுதிய சியான்சின்பான் மற்றும் சியான்சின் யீபான் என்ற இரு நூல்களில், உணவு சிகிச்சை பற்றிய சிறப்பு பகுதி இடம்பெறுகின்றது.

மனிதரின் உடல் நலம், சரியான உணவை அடிப்படையாக கொண்டது. தமது விருப்பத்தின் படி மருந்தை சாப்பிடக் கூடாது. மருத்துவர், முதலில் நோய்க்கான காரணிகளைப் புரிந்துகொண்டு, உணவைப் பயன்படுத்தி, சிகிச்சை செய்ய வேண்டும். நல்ல பயன் இல்லை என்றால், மருந்தை பயன்படுத்தலாம் என்று, அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சுன் சிமியேள, 100 வயத்துக்கு கூடுதலாக வாழ்ந்தார். அதன் காரணமாகவே, அக்கால மக்களும் எதிர்கால மக்களும், உணவு சிகிச்சை என்ற அவருடைய கருத்தை ஏற்றுக்கொண்டனர். படிப்படியாக, உணவு சிகிச்சையும், மருந்து உணவும், சீனாவின் நாட்டுப்புறத்தில் உடல் நலம், நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான மிகவும் பிரபலமான வழிமுறையாக மாறியது.

உணவு சிகிச்சை என்பது, உணவை மருந்தாக ஆக்குவது. சீனாவில் அன்றாட காய்கறிகளையும் உணவையும் பயன்படுத்தி நோய் வராமல் தடுத்து சிகிச்சை செய்யும் நுட்பம், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தெரிந்துள்ளது. குடும்பத்தில் யாருக்காவது ஜலதோஷம் பிடித்துவிட்டால், இஞ்சியும் சீன வெங்காயமும் தட்டிப்போட்டு, வெல்லம் சேர்த்து சூப் தயாரிக்கின்றனர். இதை சூடாக குடித்தால், பொதுவாக விரைவில் பயன் தெரியும். அன்றாட வாழ்வில், காலையில் இஞ்சியும் இரவில் முள்ளங்கியும் சாப்பிடுவது நல்லது என்று கூறப்படுகிறது. உப்பு, வினிகர், இஞ்சி, வெங்காயம், பூண்டு உள்ளிட்ட பொருட்களின் மருத்துவ பயன் பற்றி, நாட்டுப்புறத்தில் பல வகையான நம்பிக்கைகள் தொடர்ந்து நிலவுகின்றன.

உணவு சிகிச்சையில், மலர் உணவு ஒரு சிறப்பு பகுதியாகும். மலர்களை உணவாகத் தயாரிப்பது, கிமு ஆறாம், ஏழாம் நூற்றாண்டில் துவங்கியது.

வடசீனாவில் சுமார் 100 வகை மலர்களைச் சாப்பிடலாம். தென்மேற்கு சீனாவிலுள்ள யுவான்நான் மாநிலம், தாவர நாடு என்று கூறப்படுகிறது. அங்கு, சுமார் 260 வகை மலர்கள் சாப்பிடலாம்.

மலர் உணவு நோயை சிகிச்சை செய்வது மட்டுமல்ல, பெண்களைப் பொறுத்தமட்டில், அடிக்கடி மலர் சாப்பிடுவது நல்லது.

மருத்துவ உணவு என்பது, மருந்தை உணவாக உட்கொள்வது. மருந்தை உணவில் சேர்த்து, நோயை தடுத்து சிகிச்சை செய்யும் முறையாகும். இப்பொழுது, மருத்துவ உணவு சீனாவில் மேலும் பரவலாக வரவேற்கப்படுகிறது. கஞ்சி, ரொட்டி, சூப் மற்றும் வறுவல் இதில் இடம்பெறுகின்றன. இவ்வகை உணவை விற்பனை செய்யும் சிறப்பு உணவகங்கள் உள்ளது.

மருந்து உணவு, சீனாவில் வரவேற்கப்படுவது மட்டுமல்ல, சர்வதேச சந்தையில் நுழைந்துள்ளது. chrysanthemum மது, ஆரஞ்சுப்பழம் உள்ளிட்ட சீனாவின் மருந்து உணவுகள் வெளிநாட்டவரின் வாழ்விலும் இடம்பெற்றுள்ளன.