மூன்று திருவிழா உணவுகள்

யுவான் சியெள, சுன்சி, மூன் கேக்

中国国际广播电台

சீன பாரம்பரிய உணவுப்பழக்கத்தின் சிறப்பு, அது திருவிழாவுடன் குறிப்பிடத்தக்க தொடர்பு கொண்டிருப்பதாகும். வசந்த விழா, துவான் வூ திருவிழா, சுன் சியு திருவிழாஆகியவை, சீனாவின் நாட்டுப்புற பாரம்பரியத்தில் மிகவும் முக்கியமான மூன்று விழாக்களாகும். அடுத்து, இந்த விழாகளின் போது உண்ணப்படும் யுவான் சியெள, சுன்சி, மூன் கேக் உணவு வகைகளை அறிமுகப்படுகின்றோம்.

சீன மக்களைப் பொறுத்தவரை, வசந்த விழா, ஒரு ஆண்டில் மிகவும் முக்கியமான விழாவாகும். இவ்விழாவில் பல சாப்பாட்டு வழக்கங்கள் உள்ளன. சந்திர நாள் காட்டியின் படி ஜனவரி 15ம் நாள், யுவான் சியெள விழாவாக இருக்கிறது. இந்த நாளில், யுவான் சியெள எனும் இனிப்பைத் தின்ன வேண்டும். சீனாவின் வடபகுதியிலும், தென்பகுதியிலும் யுவான் சியெள வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. எனப்படுகிறது. தென்பகுதியில் அதன் பெயர் தான்யுவான். தான் யுவான் மற்றும் யுவான் சியெளவின் தயாரிப்பு முறை வேறுபட்டது.

வடபகுதியில், யுவான் சியெள சுருட்டப்பட வேண்டும். அதன் தயாரிப்பு முறைஎள்ளு, நிலக்கடலை, அவரை, சர்க்கரை முதலியவற்றை சேர்த்து, சிறிய உருண்டைகளாக உருண்டி, கொஞ்சம் நீரில் முக்கி எடுத்து, பசை அரிசி மாவில் நடுவில் வைக்கப்பட வேண்டும். இந்த சிறிய உருண்டைகள் பல முறை சுருட்டி, பசை அரிசி மாவை சேர்த்து, முட்டையை விட கொஞ்சம் சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும். பெய்ஜிங்கில், தேளசியான் சுன் மற்றும் குவேசியான் சுன் என்ற இரு பழைய கடைகளில் தயாரிக்கப்படும் யுவான் சியெள மக்களால் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

தென்பகுதியில், சூட்டான நீரையும் பசை அரிசி மாவையும் கலந்து பிசைந்து செய்யப்பட்ட வெள்ளை உருண்டைக்குள், பருப்புகள், நிலக்கடலை, எள்ளு, பேரீச்சம் பழம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள நின்போ தான்யுவானும், தென்மேற்கு பகுதியிலுள்ள சிசுவான் மாநிலத்தின் லைய் தான்யுவானும், மிகவும் புகழ்பெற்றவை.

யுவான்சியெளவும் தான்யுவானும், நீரில் வேக வைக்கப்பட வேண்டும். சீன மொழியில், யுவான்சியெள விழாவில் யுவான்சியெளவையும் தான்யுவானையும் சாப்பிடுவது என்பது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்வது என்று பொருளாகும்.

சந்திர நாள் காட்டியின் படி மே திங்கள் 5ம் நாள், சீனாவின் துவான் வூ திருவிழா கொண்டாடப்படுகிறது.

சுன்சி என்பது, துவான் வூ திருவிழாவின் முக்கிய உணவாகும் மூங்கில் இலையைப் பயன்படுத்தி, பசை அரிசி சுற்றி வேகவைக்கப்பட்ட உணவாகும் இது. சீனாவின் பல்வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு வேறுப்பட்ட உணவு வழக்கங்களை உள்ளதால், சுன்சியின் தயாரிப்பும் சுவையும் வேறுபட்டது. சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சுசேள, சியாசின், நின்போ முதலிய இடங்களின் சுன்சிகளுக்குள், அவரை, பேரீச்சம் பழம், இறைச்சி முதலியவை இடம்பெறுகின்றன. வட சீனாவின் சுன்சி, பேரீச்சம் பழத்தையும் அல்லது வேறு பழங்களையும் முக்கியமாக கொண்டுள்ளது.

சுன்சி, நீண்ட வரலாறுடையது. சுன்சி தின்பது, QU YUAN எனும் நாட்டுப்பற்று கவிஞரை நினைவுப்படுத்துவதாகும். QU YUAN என்பவர், கி.மு.3வது நூற்றாண்டின் CHU நாட்டில் வாழ்ந்தார். அவருடைய தாய்நாடு, எதிரி நாட்டினால் கைப்பற்றப்பட்ட பின், அதிர்ச்சியடைந்த அவர், ஆற்றில் மூழ்கி இறந்தார். அந்த நாள், மே திங்கள் 5ம் நாள். அதன் பிறகு, அவரின் தியாகத்தை நினைவு கூரும் பொருட்டு, அதே நாளில், மக்கள், பிசைந்த சோறு திணிக்கப்பட்ட மூங்கில் குழாய்களை ஆற்றில் எறிந்தனர். படிப்படியாக, இது, சுன்சியாக மாறியது.

சுன்சி, விழாவின் உணவு மட்டுமல்ல, அன்பளிப்பாகவும் இருக்கிறது. துவான் வூ விழா காலத்தில் உறவினர் வரும் போது, சுன்சியை அன்பளிப்பாக அனுப்ப வேண்டும்.

சீன சந்திர நாள் காட்டியின் படி ஆகஸ்ட் திங்கள் 15ம் நாள், சீனாவின் சுன் சியு திருவிழா ஆகும். அந்த இரவில் நிலா மிகவும் வட்டமாக இருப்பதால், இது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேரும் விழாவாகும். இந்த விழாவில் மூன் கேக் தின்ன வேண்டும். மூன் கேக் என்பது நிலா வடிவில் உள்ளே பொருள் வைக்கப்படும் கேக் ஆகும்.

சுன் சியு திருவிழா இரவில், சீன மக்கள் மூன் கேக், பழங்கள் முதலியவற்றை படையலிட்டு, நிலைவை வழிபடுகின்றனர். விழாவுக்கு பின் குடும்பத்தினர்கள் இணைந்து மூன் கேக் தின்கின்றனர்.

சீனாவின் பல்வேறு இடங்களில் பலவகை மூன் கேக்குகளைக் காணலாம். மக்கள் வாழ்க்கை நிலைமை உயர உயர, மூன் கேக்குகளின் வகையும்மாறியது. பாரம்பரிய, சர்க்கரை, பேரீச்சம் பழம், அவரை, இறைச்சி முதலியவற்றை தவிர, பழம், கோகோ உள்ளிட்ட புதிய பொருட்களும் வைக்கப்படுகின்றன.

சுன் சியு திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு கடைகளிலும், பல்வேறு வகை மூன் கேக்குவகைகள் விற்கப்படுகின்றன.