சீனாவின் தாம்புரின்
中国国际广播电台

தாம்புரின், சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான பகுதியாகும். பாரம்பரிய சீன உணவான தாம்புரின், குடும்பத்தினர் சாப்பிடும் போது, ஒன்றுக்கு சேர்வது என்ற பொருளாகவும், விருந்தினருக்கு சாப்பிட வழங்கும் போது, மதிப்பு மற்றும் பேரூக்கம் என்ற பொருளாகவும் உள்ளது. ஒரு வெளிநாட்டவர் சீனாவுக்கு வந்து, தாம்புரின் சாப்பிட வில்லை என்றால், சீனாவுக்கு செல்ல வில்லை என்றே கூறிவிடலாம்.

தாம்புரின், மாவு வடையில், சில கொத்துக்கறிகளை வைத்து மடித்து சவைக்கப்படும் உணவாகும். கடந்த காலத்தில், தாம்புரின், விழாக்காலத்தில், குறிப்பாக சு சி திருவிழாவின் இரவில் சீன மக்கள் அனைவரும் சாப்பிடும் உணவாகும். தாம்புரினின் கொத்துக்கறிகள் தயாரிப்பு, மடித்து மூடும் வடிவம், தின்பது முதலியவற்றில் பல வழக்கங்கள் இருக்கின்றன.

முதலில், கொத்துக்கறிகள் தயாரிப்பு பற்றி கூறுகின்றோம். தாம்புரினின் கொத்துக்கறிகளில், இறைச்சியும் காய்கறியும் இருக்கின்றன. பொதுவாக, இறைச்சி மற்றும் காய்கறிகள் கலந்து, அதன் பின்பு, கத்தியால் பொடியாக நறுக்க வைக்க வேண்டும்.

கொத்துக்கறி தயாரிக்கப்பட்ட பின்பு, மடித்து மூடும் வடிவம் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான பிரதேசங்களில், பிறை நிலா வடிவில் தாம்புரின் மடித்து மூடப்படுகிறது.

கடைசியாக, தாம்புரின்களை வென்னீரில் போட்டு, சுமார் 10 நிமிடம் வேகவிட வேண்டும்.

தாம்புரின் தின்னும் வழக்கமும் எவ்வேறாக இருக்கிறது. முதலாவது தட்டு தாம்புரின், மூதாதையருக்கு படைத்து வழிபாடு செய்ய வேண்டும். இரண்டாவது தட்டு, நாட்டுப்புற கடவுள்களுக்குப் படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

மூன்றாவது தட்டு தாம்புரினை குடும்பத்தினர்கள் தின்னலாம்.

ஒவ்வொரு ஆண்டின் சு சி விழாவிலும், தாம்புரின், சாப்பிட வேண்டிய உணவாகும். வெளியே வேலை செய்யவோ, கல்விகற்கவோ, வணிகம் செய்யவோ குடும்பத்தினர் சென்றிருந்தாலும் அவர்கள், வீட்டுக்கு திரும்பி, ஒன்றுக்கு இணைந்து சேர்ந்து தாம்புரின் சாப்பிட வேண்டும்.

தற்போதைய வாழ்வில், பண்பாட்டுச் சிறப்பைத் தவிர, தாம்புரினுடன் தொடர்புடைய பல்வேறு நடைமுறைகள் மாறிவிட்டன. தாம்புரின் தின்னும் வழக்கமும் மேலும் குறைந்து விட்டது.