சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட

中国国际广播电台

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடானது சீன மக்கள் நாட்டுப்பற்று ஐக்கிய முன்னணி நிறுவனமாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான பல கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கலந்தாய்வின் முக்கிய நிறுவனமாகும். சீன அரசியல் வாழ்க்கையில் சோஷலிச ஜனநாயகத்தை வெளிக்கொணரும் முக்கிய வடிவமாகும். ஐக்கியம், ஜனநாயகம் என்பது சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் இரண்டு பெரிய தலைப்புகளாகும.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு ஜனநாயக் கட்சிகள், கட்சி சார்பற்ற பிரமுகர்கள், மக்கள் நிறுவனங்கள், பல்வேறு சிறுப்பான்மைத் தேசிய இனங்கள் பல்வேறு வட்டாரங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், ஹாங்காங் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாகப் பிரதேசங்களின் உடன்பிறப்புகள், தைவான் மாநில உடன்பிறப்புகள், வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய கடல் கடந்த சீன மக்களின் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பு பெற்ற பிரமுகர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிறுவனமாக சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு விளங்குகின்றது. அதில் பல்வகை வட்டாரக் குழுக்கள் நிறுவப்படுகின்றன. பதவிக் காலம் 5 ஆண்டு.

அரசியல் கலந்தாய்வு, ஜனநாய கண்காணிப்பு, அரசியல் விவகாரங்களில் பங்கெடுத்து விவாதிப்பது என்பன சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியும் உள்ளூர் கமிட்டிகளும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளாகும்.

அரசியல் கலந்தாய்வானது, அரசு இடங்கள் ஆகியவற்றின் முக்கிய விவகாரங்களுக்கான கோட்பாடுகள், அரசியல் பொருளாதாரம் பண்பாடு சமூக வாழ்க்கை ஆகியவை தொடர்பான முக்கிய பிரச்சினைகளை தீர்மானிப்பதற்கு முன் நடத்தும் கலந்தாய்வாகவும், கொள்கைத் தீர்மானத்தின் நடைமுறையாக்கத்திலான முக்கிய பிரச்சினைகள் பற்றி நடத்தும் கலந்தாய்வும் ஆகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டி, மக்கள் அரசாங்கம், ஜனநாய கட்சிகள் , மக்கள் நிறுவனங்கள் ஆகியோரின் முன்மொழிவுக்கு இணங்க, பல்வேறு கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாளர்களும் பல்வேறு தேசிய இனப் பிரதிநிதிகளும் பல்வேறு வட்டாரங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொள்ளும் கூட்டத்தை சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசிய கமிட்டியும் உள்ளூர் கமிட்டியும் ஏற்பாடு செய்யலாம். கலந்தாய்வு மூலம் சில முக்கிய பிரச்சினைகளை கலந்தாய்வுக்காக தொடர்புடைய வாரியங்களுக்கு முன்மொழியலாம்.

ஜனநாய கண்காணிப்பானது அரசின் அரசியல் அமைபபு சட்டம், சட்டங்கள், சட்ட விதிகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறையாகும். முக்கிய கோட்பாடுகள் கொள்கைகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதாகும். முன்மொழிவு விமர்சனம் ஆகியவற்றின் மூலம் அரசு நிறுவனங்களின் பணியையும் அவற்றின் ஊழியர்களின் பணியையும் கண்காணிப்பதாகும்.

அரசியல் விவகாரங்களில் பங்கெடுத்து விவாதிப்பதானது, அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூக வாழ்க்கை போன்ற முக்கிய பிரச்சினைகள், மக்கள் பொது அக்கறை கொண்ட பிரச்சினைகள் ஆகியவற்றுக்காக கள ஆய்வு மேற்கொண்டு, சமூக மற்றும் மக்களின் கருத்தைப் பிரதிபலித்து கலந்தாலோசித்து விவாதிப்பதாகும். கள ஆய்வு அறிக்கை, கருத்துரு, யோசனை அல்லது மற்ற வடிவங்களின் மூலம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிடமும் அரசின் நிறுவனங்களிடமும் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைப்பதாகும்.

1949ம் ஆண்டு செப்டெம்பர் திங்களில் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் முதலாவது முழு அமர்வு தேசிய மக்கள் பேரவையின் சார்பில் கடப்பாட்டு உரிமையை நிறைவேற்றியது. மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, சீன மக்கள் குடியரசின் உருவாக்கத்தை அறிவித்தது. முக்கிய வரலாற்றுப் பங்கினை வெளிக்கொணர்ந்தது. 1954ல் சீனவாவின் முதலாவது தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்ற பின் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு தேசிய மக்கள் பேரவையின் கடப்பாட்டை நடைமுறைப்படுத்த வில்லை. ஆனால் சீனாவில் மிகப் பரந்தளவிலான நாட்டுப்பற்றுடைய ஐக்கிய முன்னணி நிறுவனம் என்ற முறையில் அது தொடர்ந்து நிலவுகின்றது. அத்துடன் நாட்டின் அரசியல் வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் வெளிநாடுகளுடனான நட்பார்ந்த நடவடிக்கைகளிலும் அது செவ்வனே செயல்பட்டு முக்கிய பங்கு ஆற்றியுள்ளது. 2004ம் ஆண்டு மார்ச் திங்கள் வரை சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு உலகில் 101 நாடுகளின் 170 நிறுவனங்களுடனும் 8 சர்வதேச மற்றும் பிராந்திய நிறுவனங்களுடனும் தொடர்பை நிறுவியதோடு நட்பார்ந்த பரிமாற்றத்தையும் மேற்கொண்டுள்ளது.