மத்திய ராணுவ ஆணையகம்

中国国际广播电台

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ராணுவ ஆணையகம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அதியுயர் ராணுவத் தலைமைப் பீடமாகும். மத்திய ராணுவ ஆணையகம் என்பது அதன் சுருக்கப் பெயர். தலைவர் துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோர் அதில் இடம் பெறுகின்றனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியினால் இது தீர்மானிக்கப்படுகின்றது. தலைவர் பொறுப்பு அமைப்பு முறை செயல்படுத்தப்படுகின்றது. நாட்டின் ஆயுத சக்திக்கு நேரடி தலைமை தாங்குவது அதன் முக்கிய கடப்பாடாகும். அதன் பதவிக் காலம் 5 ஆண்டுகள்.

சீனாவின் ஆயுத ஆற்றல் சீன மக்கள் விடுதலைப் படை, சீன மக்கள் ஆயுதக் காவல்துறைப் படை, மக்கள் படை ஆகியவற்றால் உருவாக்கப்படுகின்றது. மக்கள் விடுதலைப் படையானது அரசின் நிலையான படையாகும். ஆயுதக் காவல்துறைப் படை அரசு வழங்கும் பாதுகாப்புக் கடப்பாட்டுக்குப் பொறுப்பேற்று சமூக ஒழுங்கைப் பேணிகாக்கின்றது. மக்கள் படை உற்பத்தியில் ஈடுபடும் அதேவேளையில் பாதுகாப்புக் கடப்பாட்டை நிறைவேற்றும் பொது மக்கள் ஆயுத ஆற்றலாகும்.

 

ஷி ச்சின்பீங், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவ ஆணையகத்தின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.