மக்கள் நீதி மன்றம்

中国国际广播电台


மக்கள் நீதி மன்றம் நாட்டின் தீர்ப்பளிப்பு நிறுவனமாகும். நாட்டில் அதியுயர் மக்கள் நீதி மன்றம் நிறுவப்படுகின்றது. பல்வேறு மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழுள்ள மாநகரங்கள் ஆகியவற்றில் உயர் மக்கள் நீதி மன்றங்கள் நிறுவப்படுகின்றன. அவற்றின் கீழ், நடுத்தர நிலை மக்கள் நீதி மன்றங்களும், அடிமட்ட மக்கள் நீதி மன்றங்களும் செயல்படுகின்றன. அதியுயர் மக்கள் நீதி மன்றம் அரசின் உச்ச கட்ட தீர்ப்பளிப்பு நிறுவனமாகும். சுதந்திரமாகத் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துகின்றது. அதேவேளையில் பல்வேறு இடங்களின் மக்கள் நீதி மன்றங்கள், சிறப்பு மக்கள் நீதி மன்றங்களின் தீர்ப்பளிப்பு பணியை கண்காணிக்கும் மிக உயர்வான நிறுவனமாகும். அதியுயர் மக்கள் நீதி மன்றம் தேசிய மக்கள் பேரவைக்கும் அதன் நிரந்தரக் கமிட்டிக்கும் பொறுப்பு ஏற்று பணி அறிவிக்க வேண்டும். அதியுயர் நீதி மன்றத் தலைவர் துணைத் தலைவர்கள், அதியுயர் மக்கள் நீதி மன்றத்தின் தீர்ப்பளிப்பு ஆணையக உறுப்பினர்கள் ஆகியோரை நியமனம் செய்வது சீனத் தேசிய மக்கள் பேரவையால் தீர்மானிக்கபடுகின்றது.

உள்ளூர் நீதி மன்றம் அறிவித்த தீர்ப்புக்கு ஏதிரான முறையீட்டு வழக்குகளையும் தீர்ப்பளிப்புக் கண்காணிப்பு நிகழ்ச்சி நிரலின் படி அதியுயர் மக்கள் வழக்கறிஞர் மன்றம் முன்வைத்த முறையீட்டை மறுக்கும் வழக்குகளையும், தீர்ப்பு அளிப்பது, மரண தண்டனை சரிபடுத்துவது என்பன அதியுயர் மக்கள் நீதி மன்றம் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடுகளில் ஒன்றாகும். தீர்ப்பளிப்பில் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது பற்றி விளக்கம் அளிப்பது முதலியவை அதன் கடப்பாட்டில் அடங்கும்.

 

சீனாவின் அதியுயர் மக்கள் நீதி மன்றத்தின் தலைவராக சியோயான் பணிபுரிகின்றார்.