மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றம்

中国国际广播电台


மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றமானது நாட்டின் சட்டக் கண்காணிப்பு நிறுவனமாகும். அரசு வழக்கறிஞர் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தமது கடப்பாட்டை நிறைவேற்றுகின்றது. தேசத் துரோகம் தொடர்பான வழக்கு, நாட்டைப் பிளவுப்படுத்துவது தொடர்பான வழக்கு ஆகியவற்றுக்கும் மற்ற முக்கிய வழக்குகளுக்கும் எதிராக மன்றம் அரசு வழக்கறிஞர் அதிகாரத்தை நடைமுறைப்படுத்துகின்றது. பொதுப் பாதுகாப்பு நிறுவனம் துப்புதுலக்கிய வழக்குளை அது பரிசீலனை செய்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டுமா இல்லையா என்று தீர்மானிக்கின்றது. அவர்களின் மீது மேல்முறையீடு செய்வதா இல்லையா என்பதை தீர்மானிக்கின்றது. குற்றவியல் வழக்கு தொடுத்து மேல்முறையீட்டுக்கு ஆதரவளிக்கின்றது. பொது பாதுகாப்பு நிறுவனம், மக்கள் நீதி மன்றம், சிறை, தடைக்காவல் நிலையம், உழைப்பு மூலம் புதுமை பெற துணைபுரியும் நிலையம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பதை மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றம் கண்காணிக்கின்றது.

மக்கள் நீதி மன்றம் போல மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றம் சட்டத்தின் படி சுதந்திரமாக வழக்கறிஞர் அதிகாரத்தை நிறைவேற்றுகின்றது. இதில் தலையிடும் உரிமை நிர்வாக நிறுவனங்களுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் தனிநபருக்கும் இல்லை. குடிமக்கள் அனைவரும் அவர்களுக்கு ஏற்ற சட்ட ரீதியில் சமமாக இருக்கின்றனர். அதியுயர் மக்கள் அரசு வழகறிஞர் மன்றம், பல்வேறு நிலை உள்ளூர் மக்கள் வழகறிஞர் நிலையங்கள், ராணுவ வழக்கறிஞர் நிலையங்கள், ஆகியவற்றை நிறுவியுள்ளது. சீன மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றமானது அடிமட்ட, நடுத்தர, உயர், அதியுயர் நிலை என நான்கு நிலைகளில் உள்ளது. அதியுயர் மக்கள் அரசு வழகறிஞர் மன்றம் நாட்டின் அதியுயர் அரசு வழக்கறிஞர் நிறுவனமாகும். அரசின் சார்பில் சுதந்திரமாக அரசு வழக்கறிஞர் அதிகாரத்தை நிறைவேற்றுகின்றது. தேசிய மக்கள் பேரவையின் நிரந்தரக் கமிட்டிக்கு அது நேரடியாகப் பொறுப்பு ஏற்கின்றது. சட்டத்திற்கு இணங்க சட்ட கண்காணிப்புக் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் அது பல்வேறு உள்ளூர் மக்கள் அரசு வழக்கறிஞர் நிலையங்களுக்கும் தலைமைதாங்குகின்றது. நாட்டின் சட்ட ஒற்றுமையையும் சரியான நடைமுறையாக்கத்தையும் உத்தரவாதம் செய்கின்றது.

அதியுயர் மக்கள் அரசு வழக்கறிஞர் மன்றத்தின் தலைவராக சியா சன் வுகான் பணிபுரிகின்றார்.