ஷி ச்சின்பீங்

ஷி ச்சின்பீங், ஆண், ஹான் இனத்தவர். 1953ம் ஆண்டு ஜூன் திங்கில் சாங்சி மாநிலத்தின் ஃபூபிங்கில் பிறந்தார். 1969ம் ஆண்டு ஜனவரி திங்கள் பணி புரிய தொடங்கினார். 1974ம் ஆண்டின் ஜனவரி திங்களில்,சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ச்சிங்குவா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் சமூகஅறிவியல் கல்லூரியில் மார்க்சிசம் தத்துவம் மற்றும் கருத்தியல் கல்வித்துறையில் தேர்ச்சி பெற்றார். தவிரவும், அவர், முதுகலை பட்டமும் சட்ட முனைவர் பட்டமும் பெற்றவராவார்.

தற்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர்,சீனக் கம்யூனிஸட் கட்சி மத்தியக் ராணுவக் கமிட்டித் தலைவர், சீன மக்கள் குடியரசின் துணை தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய ராணுவ கமிட்டியின் துணை தலைவர்,சீனக் கம்யூனிஸட் கட்சி மத்திய கல்லூரி வேந்தர் ஆகிய பதவிகளில் ஏற்கிறார்.

வாழ்க்கை குறிப்பு:

1969-1975ம் ஆண்டில், சாங்சி மாநிலத்தின் யன் ச்சுவான் மாவட்டத்தின் வென் அன் யி கம்யூனின் லியாங் ஜியா ஹே அணியின் அறிவு இளைஞர் மற்றும் சீன.கம்யூனிஸ்ட் கட்சியின் இவ்வணியின் செயலாளர்

1975-1979ம் ஆண்டில் ச்சிங்குவா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பயின்று பட்டம் பெற்றவராவார்

1979-1982ம் ஆண்டில், சீன அரசவையின் அலுவலகம் மற்றும் மத்திய ராணுவ கமிட்டி அலுவலகத்தின் செயலாளர்

1982-1983ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஹெய்பெய் மாநிலத்து ச்செங் டிங் மாவட்டக் குழுவின் துணை செயலாளர்

1983-1985ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெய்பெய் மாநிலத்தின் ச்செங் டிங் மாவட்ட குழு செயலாளர், ச்செங் டிங் மாவட்ட ஆயுதப் படைப்பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

1985-1988ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்தின் சியா மன் நகரின் குழுவின் நிரந்தர உறுப்பினர், சியான் மன் நகரின் துணை தலைவர்

1988-1990ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்தின் நிங் தே பிரதேச குழுச் செயலாளர், கட்சியின் நிங் தே இராணுவ பிரதேச குழுவின் செயலாளர்

1990-1993ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்தின் ப்பூச்சோ நகரின் குழுச் செயலாளர், ப்பூச்சோ நகரின் மக்கள் பேரவைத் தலைவர், கட்சியின் ப்பூச்சோ இராணுவ பிரதேசத்தின் குழுச் செயலாளர் 1993-1995ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்து குழுவின் நிரந்தர உறுப்பினர், கட்சியின் ப்பூச்சோ நகரின் குழுச் செயலாளர், ப்பூச்சோ நகரின் மக்கள் பேரவைத் தலைவர், கட்சியின் ப்பூச்சோ இராணுவப் பிரதேசத் குழுவின் முதலாவது செயலாளர்

1995-1996ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்துக் குழுவின் துணை செயலாளர், கட்சியின் ப்பூச்சோ நகரின் குழுச் செயலாளர், ப்பூச்சோ நகரின் மக்கள் பேரவைத் தலைவர், கட்சியின் ப்பூச்சோ இராணுவப் பிரதேசக் குழுவின் முதலாவது செயலாளர்

1996-1999ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலக் குழுவின் துணை செயலாளர், ப்பூச்சியான் மாநிலத்து பீரங்கி ஆயத்தப்படைப் பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

1999-2000ம் ஆண்டில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்துக் குழுவின் துணை செயலாளர், மாநிலத்தின் பதில் தலைவர், நன் ஜிங் இராணுவ பிரதேசத்தின் தேசிய பாதுகாப்பு அணிதிரட்டல் கமிட்டியின் துணை தலைவர், ப்பூச்சியான் மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டித் தலைவர், ப்பூச்சியான் மாநில பீரங்கி ஆயத்தப் படைப் பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

2000-2002ம் ஆண்டில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ப்பூச்சியான் மாநிலத்துக் குழுவின் துணை செயலாளர், மாநிலத் தலைவர், நன் ஜிங் இராணுவ பிரதேச தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டியின் துணை தலைவர், ப்பூச்சியான் மாநிலத்தின் தேசியப் பாதுகாப்பு அணி திரட்டல் கமிட்டித் தலைவர், ப்பூச்சியான் மாநிலத்து பீரங்கி ஆயத்தப் படைப் பிரிவின் முதலாவது அரசியல் உறுப்பினர்

2002-2002ம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சேச்சியாங் மாநிலத்துக் குழுவின் துணை செயலாளர் மாநிலத்தின் பதில் தலைவர்

2002-2003ம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சேச்சியாங் மாநிலத்துக் குழுச்செயலாளர் மாநிலத்தின் பதில் தலைவர்

2003-2007ம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சேச்சியாங் மாநிலத்து குழுச் செயலாளர், மாநில மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் தலைவர்

2007-2007ம் ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் மாநகரக் குழுச் செயலாளர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் காவற்படை பிரதேச குழுவின் முதலாவது செயலாளர்

2007-2008ம் ஆண்டில் சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் செயலாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கல்லூரி வேந்தர்

2008-2010ம் ஆண்டில் சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் செயலாளர், சீன மக்கள் குடியரசின் துணை தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கல்லூரி வேந்தர்

2010-2012ம் ஆண்டில் சீனக் கம்யூனி்ஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செயலகத்தின் செயலாளர், சீன மக்கள் குடியரசின் துணை தலைவர், மத்திய இராணுவ கமிட்டியின் துணை தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய இராணுவ கமிட்டியின் துணை தலைவர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கல்லூரி வேந்தர்

2012-இது வரை, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர், மத்தியக் இராணுவக் கமிட்டித் தலைவர், சீன மக்கள் குடியரசின் துணை தலைவர், சீன மக்கள் குடியரசின் மத்திய இராணுவ கமிட்டியின் துணை தலைவர், சீனக் கம்யூனிஸ் கட்சியின் மத்திய கல்லூரி வேந்தர்