லீ க்கெச்சியங்

லீ க்கெச்சியங், ஆண், ஹான் இனத்தைச் சேர்ந்தவர். 1955ஆம் ஆண்டின் ஜுலை திங்களில் ஆன்ஹூய் மாநிலத்தின் தின்யூவானில் பிறந்தார். 1974ம் ஆண்டு மார்சு திங்களில் பணிபுரிய தொடங்கினார். 1976ம் ஆண்டின் மே திங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். பீகிங் பல்கலைக்கழகத்தின் சட்டவியல் துறையிலும் பொருளாதார கல்லூரியின் பொருளியல் துறையிலும் பட்டம் பெற்றார். இவர் முதுகலை பட்டம், சட்டவியல் பட்டம், பொருளியல் முனைவர் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவராவார்

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனாவின் துணைத் தலைமையமைச்சர் ஆவார்

வாழ்க்கை குறிப்பு:

1978-1982ம் ஆண்டு பெய்சிங் பல்கலைகழகத்தின் சட்டவியல் துறையில் பயின்று, மாணவர் சங்கத்தின் பொறுப்பாளர்.

1993-1998ம் ஆண்டு, சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர் லீகின் மத்திய கமிட்டி செயலகத்தின் முதன்மைச் செயலாளர், சீன இளைஞர் அரசியல் கல்லூரியின் வேந்தர்

1998-1999ம் ஆண்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெனான் மாநிலத்தின் குழுவின் துணைச் செயலாளர், மாநிலத்தின் பதில் தலைவர்

1999-2002ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெனான் மாநிலத்தின் குழுவின் துணை செயலாளர், மாநில தலைவர்

2002-2003ம்ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெனான் மாநிலத்தின் குழுச் செயலாளர், மாநில தலைவர்

2003-2004ம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஹெனான் மாநிலத்தின் குழுச் செயலாளர், மாநில மக்கள் பேரவையின் நிரந்தர குழு தலைவர்

2004-2005ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் லியௌ நிங் மாநிலக் குழுச்செயலாளர்

2005-2007ம் ஆண்டு ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் லியௌ நிங் மாநிலக் குழுச்செயலாளர், மாநில தலைவர், மக்கள் பேரவையின் நிரந்தர குழு தலைவர்

2007-2008, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்

2008-இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனாவின் துணைத் தலைமையமைச்சர், மூ மலை பள்ளத்தாக்குத் திட்டப்பணிக்கான கட்டுமான ஆணையத்தின் இயக்குநர், நீரை தெற்கிலிருந்து வடக்கிற்கு எடுத்துச்செல்வதன் திட்டப்பணிக்கான கட்டுமான ஆணையத்தின் இயக்குநர்

இவர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 15வது, 16வது, 17வது, மற்றும் 18வது மத்திய கமிட்டியின் உறுப்பினர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது, 18வது மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீன தேசிய மக்கள் பேரவையின் 8வது நிரந்தர குழுவின் உறுப்பினர் முதலிய பதவிகளில் ஏற்கிறார்