சாங் தெஜியாங்

சாங் தெஜியாங், ஆண், ஹான் இனத்தச் சேர்ந்தார். 1946ஆம் ஆண்டின் நவம்பர் திங்களில் லியௌ நிங் மாநிலத்தின் டைய் டூங்கில் பிறந்தார். 1968ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் பணி புரியத் தொடங்கினார். 1971ஆம் ஆண்டின் ஜனவரி திங்களில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வட கொரியாவின் கிம் இல் சுங் பன்நோக்கப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் பட்டத்தாரி ஆவார். இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தற்போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனத் துணைத் தலைமையமைச்சரும், சீனக் கட்சிக் கமிட்டியின் ச்சோங் ஜிங் மாநகராட்சிக் குழுச் செயலாளரும் ஆவார்.

வாழ்க்கை குறிப்பு:

2002-2007ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் குவாங் டூங் மாநிலத்தின் குழுச் செயலாளர்

2007-2008ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர்

2008-2012ம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், சீனத் துணைத் தலைமையமைச்சர், கட்சியின் ச்சோங் ஜிங் மாநகராட்சிக் குழுச் செயலாளர்

2012-இதுவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், சீனத் துணைத் தலைமையமைச்சர், கட்சியின் ச்சோங் ஜிங் மாநகராட்சிக் குழுச் செயலாளர்