யூ ச்சங்சங்

யூ ச்சங்சங், ஆண், ஹான் இனத்தவர். 1945ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள், செச்சியாங் மாநிலத்தின் சாவ்சிங் நகரில் பிறந்தவர். 1963ஆம் ஆண்டின் ஆகஸ்ட் திங்கள் பணி புரியத் துவங்கினார். 1964ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஹார்பின் இராணுவப் பொறியல் பல்கலைக்கழகத்தின் எறிவிசை ஏவுகணைத் தானியக்கக் கட்டுப்பாடு என்னும் சிறப்புத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். பொறியியலாளர்.

தற்போது, அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினராகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் கட்சிச் செயலாளராகவும் உள்ளார்.

வாழ்க்கை குறிப்பு:

2001-2001ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹூபெய் மாநிலத்தின் குழுச் செயலாளர்

2002-2003ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் ஹூபெய் மாநிலத்தின் குழுச் செயலாளர், ஹூபெய் மாநிலத்தின் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர்

2003-2007ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் ஹூபெய் மாநிலத்தின் குழுச் செயலாளர்

2007-2008ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழுச் செயலாளர்

2008-2011ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழுச் செயலாளர், 2010ஆம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஏற்பாட்டுக்குழுவின் முதன்மைத் துணை இயக்குநர் உறுப்பினரும், செயற்குழு இயக்குநரும்

2011-2012ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழுச் செயலாளர்

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழுவின் உறுப்பினர், கட்சியின் ஷாங்காய் மாநகராட்சிக் குழுச் செயலாளர்