லியூ யுன்ஷென்

லியூ யுன்ஷென், ஆண், ஹான் இனத்தவர். 1947ஆம் ஆண்டின் ஜுலை திங்கள், ஷான்சி மாநிலத்தின் சின்சோ நகரில் பிறந்தவர். 1966ஆம் ஆண்டின் செப்டம்பர் திங்கள் பணி புரியத் துவங்கினார். 1971ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

தற்போது, அவர் மத்திய கமிட்டி அரசியல் குழு நிரந்தர உறுப்பினராகவும், மத்தியக் கமிட்டிச் செயலகத்தின் செயலாளராகவும், பிரச்சார அமைச்சராகவும் உள்ளார்.

வாழ்க்கை குறிப்பு:

1997-2002ஆம் ஆண்டு கட்சியின் மத்திய பிரச்சாரத் துறைத் துணை அமைச்சர், மத்தியத் தார்மீக நாகரிகக் கட்டுமான மேலாண்மை அலுவலகத்தின் இயக்குநர்

2002-2012ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், மத்தியக் கமிட்டிச் செயலகத்தின் செயலாளர், கட்சியின் மத்திய பிரச்சார அமைச்சர்

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய அரசியல் குழு நிரந்தர உறுப்பினர், மத்தியக் கமிட்டிச் செயலகத்தின் செயலாளர், மத்திய பிரச்சார அமைச்சர்