வாங் ச்சிஷென்

வாங் ச்சிஷென், ஆண், ஹான் இனத்தவர். 1948ஆம் ஆண்டின் ஜுலை திங்கள், ஷான்சி மாநிலத்தின் தியான்சென் நகரில் பிறந்தவர். 1969ஆம் ஆண்டின் ஜனவரி திங்கள் பணி புரியத் துவங்கினார். 1983ஆம் ஆண்டின் பிப்ரவரி திங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். வடமேற்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றவர். உயர்நிலை பொருளியலாளர்.

தற்போது, அவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் அரசியல் குழு நிரந்தர உறுப்பினராகவும், மத்தியக் கட்டுப்பாட்டு கண்காணிப்பு கமிட்டியின் செயலாளராகவும், சீனத் துணைத் தலைமையமைச்சராகவும் உள்ளார்.

வாழ்க்கை குறிப்பு:

2008-2011ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், துணைத் தலைமையமைச்சர், 2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சி ஏற்பாட்டு குழுவின் உறுப்பினர்

2011-2012ஆம் ஆண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், துணைத் தலைமையமைச்சர்

2012ஆம் ஆண்டு முதல் இதுவரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கட்டுப்பாட்டு கண்காணிப்பு ஆணையத்தின் செயலாளர், துணைத் தலைமையமைச்சர்