ச்சியூ யிங்கும் அவருடைய ஓவியமும்
中国国际广播电台


ச்சியூ யிங்1493-1560 என்பவர், ஜியாங்சு மாநிலத்தின் தைசாங் நகரைச் சேர்ந்தவர். ஆசிரியர் சோ செனிடம் ஓவியம் வரைய கற்றுக் கொண்டார். இயற்கை காட்சிகளையும் மற்றும் மனித உருவங்களையும் ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றார். தௌயுவான் சொர்க்கம்என்ற தலைப்பிலான ஓவியம், குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து வெகு தூரத்தில் மறைந்திருக்கும் ஒரு சொர்க்க காட்சியை வர்ணிக்கின்றது. உயரமான மலைப் பள்ளத்தாக்கில் தவழும் மேகங்களுக்கு இடையில் கோயில் நிற்கின்றது. கோயிலுக்கு முன்னால் ஒரு பாலத்தின் கீழ் சிற்றோடை நீர் ஓடுகின்றது. மனிதர்களுக்கு ஒரு சொர்க்கம் போன்ற காட்சியைத் தருகின்றது. ஓவியரின் வரைவுக் கலை மிக நுணுக்கமானது. ஓவியத்தில் மனிதர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர். ஓவியர் வேறுபட்ட நிறங்களைப் பயன்படுத்தி, மனிதனை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். இவையனைத்தும் மனிதன் மற்றும் இயற்கை காட்சி பற்றிய ஓவியத்தில் அவரின் ஆழ்ந்த கலை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளன.