தாங்யானும் அவருடைய ஓவியமும்
中国国际广播电台


மிங் வமிச காலத்தில் பிறந்த தாங்யான் 1470-1523என்பவர், இன்றைய சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் சூச்சோ நகரைச் சேர்ந்தவர். கவிதை எழுதுவதிலும் ஓவியம் வரைவதில் தேர்ச்சி பெற்றவர். முதுமை வயதில் அவர் புத்தமதத்தை நம்புகின்றார்.

கழுதை சவாரி செய்து திரும்பும் வழியில்என்னும் ஓவியம் பட்டுத் துணியில் வரையப்பட்டது. ஓவியத்தில் நிறம் லேசாக காணப்படுகின்றது. அதில் விசித்திரமான மலை சிகரங்களும், பல்வகை மரங்களும், மலை கிராமங்களும் காணப்படுகின்றன. ஓடை நீர் சல சல என்று மலைப் பள்ளத்தாக்கில் ஓடுகிறது. பசுமையான மரங்கள் காற்றில் அசைகின்றன. ஒருவர் கழுதையின் மேல் சவாரி செய்து மலைப் பாதையில் ஒரு குடிசையை நோக்கி செல்கின்றார். முன்னால், மலைகளுக்கிடையில் ஒரு சிறிய ஆற்றின் மேலுள்ள மரப் பாலத்தில், ஒரு விவசாயி விறகை தூக்கிய வண்ணம் நடக்கின்றார். தாங் யான் எழுதிய ஒரு கவிதை இந்த ஓவியத்தில் தனிச்சிறப்புடன் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.