மண்டியிட்டு இலக்கை நோக்கி குறிப்பார்த்துச் சுடும் படைவீரர் உருவச்சிலைகள்
中国国际广播电台

       

படத்தின் விளக்கம் ச்சின் சி ஹுவாங் பேரரசரின் கல்லறையின் இரண்டாம் குழியிலிருந்து தோண்டி யெடுக்கப்பட்ட மண்டியிட்டு இலக்கை சுடும் சுடுமண் படைவீரர் உருவச்சிலைகள்

இரண்டாவது குழியிலிருந்து எடுக்கப்பட்ட இந்த சிலைகளின் உயரம் 120 சென்டி மீட்டர். இரண்டாம் குழியில் பல்வகை படைவீரர் சிலைகள் வளைந்த அணி வடிவில் நிற்கின்றன. மண்டியிட்டு இலக்கை சுடும் சிலைகள் நடுவில் உள்ளன.

இந்த சிலைகளின் மேல் பகுதி நிமிர்ந்து இருக்கின்றது, கீழ் பகுதியின் வலது முழங்காலும் காலின் நுனியும் இடது காலும் நிலத்தில் ஊன்றியதால் உடல் உறுதியாக நிற்கிறது. கவச ஆடை உடல் இசைவதோடு மாறுகின்றது. இவ்வாறு இந்த சிலைகள் மேலும் உயிருடன் இருக்கும் படைவீரர்கள் போல உள்ளன. மண்டியிட்டு இலக்கை சுடும் சிலைகள் சீனாவின் பழங்கால சிற்பங்களின் சிறப்பு படைப்பாகும்.