குவன்யின் கருணை கடவுள்
中国国际广播电台

       
(படத்தின் விளக்கம்: ஷான்சி மாநிலத்தின் பிங்யோ நகரிலுள்ள மிங் வம்சக் காலத்தில் தயாரிக்கப்பட்ட சிற்பப் படைப்பான குவன்யின் கருணை கடவுள்)

சுவாங்லின் கோயிலில் மிங் வம்ச காலத்தில் தயாரிக்கப்பட்ட பல வர்ண சிற்பங்கள். இந்தக் கோயில் வட வம்சக் காலத்தின் முற்பாதியில் கட்டப்பட்டது. கோயிலில், தியன்வாங் மண்டபம், சாக்கியமுனி மண்டபம், தாசியுங் மண்டபம், புத்த கதிர் மண்டபம் ஆகியன உள்ளன. கோயிலுக்கு மேற்கு பக்கத்தில் லோஹான், வூசன், தீசாங், துதி, ச்சியன் போ மற்றும் கருணை கடவுள் மண்டபங்களும் உள்ளன. எல்லா மண்டபங்களிலும் புத்தர் சிலைகள் உள்ளன. அவற்றின் மொத்த தொகை ஈராயிரத்துக்கும் அதிகமாகும். அவற்றில் 1556 சிலைகள் சிறிதும் சிதையாமல் காணப்படுகின்றன. தியன் வாங் கோயிலில் படைவீரர் மற்றும் கருணை கடவுள் சிலைகள் உள்ளன. சாக்கியமுனி கோயிலில், 48 சிற்பங்கள் உள்ளன. லோகான் கோயிலில் காணப்படும் 18 சிலைகள் இயல்பான நிலையில் உள்ளன. ச்சியன் போ மண்டபத்தில் குவான்யின், வெய்தோ, யேச்சா உள்ளிட்ட கடவுள்கள் உள்ளன. இந்த சிற்பங்கள் அனைத்தும் எண்ணிக்கையிலும் சரி, தரத்திலும் சரி சீனாவில் முதலிடம் வகிக்கின்றன. எனவே சுவாங்லின் கோயில் சீன வண்ண சிற்ப கலையின் அருங்காட்சியகம் என அழைக்கப்படுகின்றது.