பறக்கும் குதிரை
中国国际广播电台


செம்பால் ஆன இந்த பறக்கும் குதிரையின் உயரம் 34.5 சென்டி மீட்டர், நீளம் 45 சென்டி மீட்டர், அகலம் 10 சென்டி மீட்டர். கிழக்கு ஹான் வம்ச காலத்தில் தயாரிக்கப்பட்ட இந்த சிற்பம் கான்சு மாநிலத்தின் வூவெய் லெய்தை கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது. இப்பொழுது அது கான்சு மாநிலத்தின் பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பழங்கால சீனாவில் போரிடுவது, போக்குவரத்து, செய்தித்தொடர்பு ஆகியவற்றில் மிகவும் பயனுள்ள கருவியாக குதிரை விளங்கியது. ஹான் வம்ச ஆட்சி XIONGNU இனத்தின் படையெடுப்பை எதிர்த்துப் போராடி, வட பகுதியில் அமைதியைப் பேணிக்காப்பதற்கு, வலுவான குதிரைப் படை இன்றியமையாத படையாகும். எனவே, ஹான் வம்ச மக்கள் குதிரையை மிகவும் விரும்பி, அதை தேசிய இனத்தின் கௌரவமாகவும் தேசிய ஆற்றல் மற்றும் உன்னத சாதனையின் அறிகுறியாகவும் கருதுகின்றனர். எனவே, பல வீரதீரமுடைய குதிரைகளின் உருவம், ஹான் வம்ச ஆட்சிகாலத்தின் சிற்பங்களிலும் இலக்கிய படைப்புகளிலும் இடம்பெற்றன. அவற்றில் பறக்கும் குதிரைஎன்ற சிற்பம் உலகப் புகழ்பெற்றது.

இந்த வேகமாக பறக்கும் குதிரை வலுமிக்க உடலுடன் தலை நிமிர்ந்து காணப்படுகின்றது. மூன்று கால்கள் தொங்க, ஒரு கால் மட்டும் ஒரு பறக்கும் பறவையின் மேல் ஊன்றிநிற்கின்றது. இந்த ஆற்றல் மிக்க குதிரை மிகவும் லேசாக பறந்து ஓடுகின்றது. இந்த குதிரையின் ஒரே கால் மட்டும் உடலின் முழு பளுவையும் ஒரு சிறிய ஊர்க்குருவியின் மேல் வைத்துள்ளது என்பதை மக்கள் மறந்து விடுவார்கள். ஹான் வம்ச கால கலை நிபுணர்களின் விவேகம் வளமான கற்பனை, புத்துணர்வு, உயரிய கலை நுட்பம் ஆகியவற்றைத் திரட்டி உருவாக்கப்பட்ட இந்த சிற்பம், பழங்கால சீனாவின் மிகவும் அரிதான கலைப் படைப்பாகும்.