மேச்சிசான் மண்டபம்
中国国际广播电台


மேச்சிசான் மண்டபம், சீனாவின் வட மேற்கு பகுதியிலுள்ள GANSU மாநிலத்தின் TIAN SHUI தென் கிழ்ககே 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற ஒரு மலையில் அமைந்துள்ளது. 150 மீட்டருக்கு மேல் உயரத்தில் உள்ளது. இந்த மண்டபம், கி மு 3ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 30-70 மீட்டர் உயர் மலையில் புத்த சிலை செதுக்கப்பட்டது.

(படம்: மேச்சிசான்)

பெய்வெய் சிவெய் பெய்சோ சுயிதங் வுதாய் சொங் யுவான் மின் சிங் ஆகிய வமுச குகைகளில் 194 நில சிலைகளும், 7000க்கு அதிகமான கலை சிலைகளும், 1300 சதுர மீட்டர் பரப்புக்கு சுவர் ஓவியங்களும் இருக்கின்றன. உள் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான தத்ரூபமான சிற்பங்களும் உண்டு. இவை வாழ்க்கையின் பல அம்சங்களைப் பிரதிபலிக்கின்றன. அவருக்கு அருகில் பல் சீடர்கள் இருக்கின்றனர். சிலர் மிகுந்த கவனத்துடன் புத்த நூலை படிக்கிறார்கள், சிலர் பேசுகிறார்கள், சிலர் சிரிக்கிறார்கள், சிலர் மற்றவருக்கு வணக்கம் சொல்கிறார்கள். தவிரவும், மத உணர்வுடனான குழந்தை சிற்பங்களும் இருக்கின்றன. எந்த 16 மீட்டர் உயர்மான புத்தரும் 10 செனஅடிமீட்டர் உயரமுன்ற சிற்பங்களும், கண்டுகளிக்கத்தக்கவை.. பல சிற்பங்கள், புத்தரை மனிதர் போல சித்திரிக்கின்றன. அவை வாழ்க்கை விளக்கங்களாக உள்ளன. புத்த இயல் வரலாறு, வரலாற்றியல், தொல்லியல் இயல், மக்கள் வாழ்க்கை பண்பாட்டியல் ஆகியவற்றுக்கு உண்மையான சான்றுகளாக இவை திகழ்கின்றன. மைஜிஷான் உள் மண்டபம், காட்டு பிரதேசத்தில் அமைந்திருப்பதால், வரலாற்றின் போர்களாலும் மனித குலத்தாலும் சீர்குலைக்கப்படவில்லை. இதன் விளைவாக, நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ளது.

ஹொனான் மாநிலத்தின் லோங்மென் உள் மண்டபம், லுயோயால் நகரின் தென் பகுதியிலுள்ள 13 தொலைவான யிஹெ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கே மிக அழகான பல கோயில்கள் உண்டு. கவிஞர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இது விருப்பமான இடமாகும். இந்த உள் மண்டபம், சுமார் கி பி 492ம் ஆண்டில்தொடங்கி கட்டி முடிக்க 400க்கு மேலான ஆண்டுகளாயின. மலையின் உயரம் 2300 மீட்டருக்கும் அதிகமாகும். 1 லட்சம் புத்த சிற்பங்களை இங்கு காணலாம். 3600 கல்வெட்டுகள் உள்ளன, புத்த கோயில்கள் 40 உள்ளன. உள் மண்டபத்திலான சுவர் ஒவியத்தில் வனதெய்வங்களின் சைகைகளும், பாவனைகளும் அழகானது. மக்களுக்கு அவை வியப்பூட்டுகின்றன.

பழைய கலைஞர்கள் உருவாக்கியுள்ள பல்வகை நிறமான ஓவியங்கள் சீனாவின் பண்டைக்க காலத்தின் வரலாற்றையும் கலையையும் ஆராய்ச்சி செய்யும் முக்கிய ஆவணங்களாக மாறியுள்ளன.

குயிங் குகை கட்டும்பணி கி பி 494ம் ஆண்டில் கட்டுபடுத்தப்பட துவங்கியது. லோங்மென் உள் மண்டபம் முதலில் கட்டப்பட்ட கலைப்படைப்பு அதிகமான ஒரு குகையாகும். பிற குகை பீன்யாங் குகை, கி பி 500ம் ஆண்டில் அதைக் கட்டும் வேலை துவங்கியது. கி பி 523ம் ஆண்டில் நிறைவடைந்தது. 24 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்டது. முக்கிய புத்தரான சாக்கியமுனி, தமது சீடர்கள், மற்ற புத்தர்கள் ஆகியோரின் சிற்பங்களின் முகங்கள் ஒல்லியானது. ஆடை ஒழுங்கானவை. அவை, பெய்வெய் வம்ச காலத்திய சிற்பக் கலையினஅ தனிச்சிறப்பை வெளிகாட்டியுள்ளன.