வெண்கலமணி
中国国际广播电台


பண்டைய சீனாவில் ஆட்சியாளர்கள், இசையில் முக்கிய கவனம் செலுத்தினர். கவிதைகள், மக்களுக்கு ஊக்கம் தந்தன. மனித குலத்தின் நடவடிக்கையை ஒழுங்குபடுத்தின. ஒரு நாட்டில் அழகான இசை இருந்தால் அந்த நாடு செழுமையானது. இதனால், நாட்டின் செழுமையா இல்லையா என்பதை, இசையிலிருந்து காணலாம். 1978ம் ஆண்டு, சீனாவின் நடுப்பகுதியிலுள்ள சுயிசோ நகரில் ஒரு பழைய கல்லறையில் பெரிய வெண்கலமணி கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கண்டிப்பு மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த உண்மை பொருள், வரலாற்று ஆவணங்களை மெய்ப்பித்துள்ளது. மக்கள், சீனாவின் பழைய சமூக பண்பாட்டை அறிந்துக் கொள்வதற்கு புதிய சான்றுகளை வமங்கியுள்ளது.

இந்த வெண்கலமணி இது வரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்களிலேயே மிக பெரிய மணி ஆகும். வெண்கல வார்ப்பு நுட்பம் ம்ற்றும் என்ற கோணத்தில் பார்த்தால், இது முன்னணியில் இடம் பெறுகின்றது.

வகை அமைப்பு முறை, அளவு, தொனிக்கு இணங்க, 8 பிரிவுகளை கொண்டது. அதில் மிக பெரிய மணியின் உயரம் 153.4 சென்டிமீட்டர், மிக சிறிய மணியின் உயரம் 20.4 சென்டமீட்டராகும். அதன் மொத்த எடை 2500 கிலோகிராம்ன் ஆகும். மணியில், பழைய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

கள ஆய்வு மூலம், இந்த கல்லறையின் உரிமையாளர், போரிடும் காலத்தைச் சேர்ந்த சங் நாட்டின் மேல் சமூகத்தினர் செங்ஹோயி. செங்கோயி என்பது, செங் நாட்டில் ஒருவரை ஈ எனமரியாதையாக அழைக்கப்படும் பண்பாட்டில் இருந்த தோன்றியது. கல்லறையிலிருந்து கிடைத்த தகவலின்படி, இந்த கல்லறையின் உரிமையாளர், கல்லறையில் கிடத்தப்பட ஆண்டு, சுமார் கி மு 400 என்று தெரிகிறது. அவருடன் சேர்ந்து, இந்த கல்லறையில் போடப்பட்ட பல பொருட்கள், நீண்ட காலமாக நீரில் இருந்தபடியால். அவை ஈராயிரம் ஆண்டுக்களுக்குப் பின்னரும் சேதமடைய வில்லை.

இந்த கல்லறை திறக்கப்பட்டு அதில் பொருட்களை திரட்டி வைக்க அருங்காட்சியகம் நிறுவப்பட்டது. சீர்படுத்தப்பட்டு, வெண்கலமணி காட்சிக் கூடமாக்கப்பட்டது. வெண்கலமணி ஒலிக்கின்ற இசைக்கிணங்க, பழைய இசைக் குழு நிறுவப்பட்டு, மக்கள் இதன் மூலம் பழைய இசையைக் கேட்டு ரசிக்க முடியும்.