மிங் வமிச பதினாறு கல்லறைகள்
中国国际广播电台


மிங் வமிச பதினாறு கல்லறைகள், ஒரு அரசியல் போருடன் தொடர்புடையது. மிங் வமிசத்தின் முதலாவது அரசர் சூ யுவான் சாங், தென்கிழக்கு சீனாவிலுள்ள நான்ஜிங் நகரை தலைநகராக நிறுவினார். அவர் மறை பிறகு, அவருடைய பேரன் அரசராக ஆனார். ஆனால், சூ யுவான் சாங்கின் நான்காவது மகன் சூ லீ, உள் நாட்டுப் போரை நடத்தி, இறுதியில் ஆட்சியைக் கைப்பற்றினார். சூ லீ ஆட்சி பீடத்தில் ஏறிய பின், தலைநகரை, பெய்ஜிங்கிற்கு மாற்றி விட்டார். அவர் ஆட்சிக்கு புரிந்த காலத்தில், தமக்கு கல்லறை கட்டும் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். இறுதியில், பெய்ஜிங்கின் வடமேற்கு புறநகர் பகுதியில் தனது கல்லறையைக் கட்ட முடிவு செய்தார். 1409ம் ஆண்டு முதல், 1644ம் ஆண்டு வரை சுமார் 13 மிங் வமிசத்தின் அரசர்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டனர். இதனால், மிங் வமிசத்தின் பதினாறு கல்லறைகள் என இந்த இடம் அழைக்கப்பட்டது.

 

மிங் வமிசத்தின் பதினாறு கல்லறைகளின் ஒழுங்கு முறை, மிங் சியேள லின் போன்றது. கல்லறையின் மையப் பகுதியில் அஞ்சலிப்பாதை இருக்கிறது. கல்லறையின் வாசலில் முன்பு, ஒரு உயரமான நினைவுச் சின்ன கல்கதவு உள்ளது. பெரிய கோலியினால் கட்டப்பட்ட இந்த கற்கதவில் அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. அதற்கு பின், கல்லறையின் முறையான கதவு உள்ளது. அங்கிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் நீளமான சுவர், கல்லறையைச் சுற்றி கட்டப்பட்டுள்ளது. இதில் 10 சாவடிகள் இருந்தன. பண்டைகாலத்தில் கல்லறை பாதுகாப்புக்காக, ஒவ்வொரு சாவடியிலும் படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.

படம்அஞ்சலிப்பாதை

தமது கல்லறையைப் பாதுகாப்பதற்காக, அரசர்கள் பல பொய்க் கதைகளைப் பரப்பி, கல்லறையை மறைத்து ரகசியமாக மூடியே வைத்திருந்தனர். இதனால், நிலத்தடி மாளிகை மர்மங்கள் நிறைந்ததாக இருந்து, இதில், தீங் லிங் என்னும் நிலத்தடி கல்லறை மாளிகை குறிப்பிடத்தக்கது. 1956ம் ஆண்டின் மே திங்களில், சீனாவின் தொல்லியல் நிபுணர்கள், தீங் லிங் கல்லறையின் நிலத்தடி மாளிகையை வெளியே தோண்டி எடுத்தனர். இந்த நிலத்தடி மாளிகையின் மொத்த பரப்பளவு, 1195 சதுர மீட்டர். இதில் ஐந்து அறைகள் உள்ளன. திங் லிங் கல்லறையில், பல அரிய தொல் பொருட்கள் வெளியே தோண்டி எடுக்கப்பட்டன. இதில், பல வண்ண ஆடைகளும், அழகான தங்க நகைகளும் இருந்தன. இவை, மிங் வமிசக்காலக் கலை ஆராய்ச்சிக்கு பயன்படும் அரிய பொருட்களாகும்.

படம்மிங் வமிச பதினாறு கல்லறைகளின் தொல் பொருட்கள்