மென் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையும் தங்க நூலால் நெய்த ஆடையும்
中国国际广播电台
 

சீனாவின் சீ ஹென் காலத்தில் கி.மு.206-8ஜேட் கற்களுக்கு இடையே வைக்கப்படும் சவம் என்றுமே அழுகாமல் இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையில் பரவியிருந்தது. ஆகவே அரசரும் மதிப்புக்குரிய மன்னர் குடும்பத்தினர்களும் மரணமடைந்த பின் போர் க் கவசம் போன்ற ஆடை சவத்திற்கு அணிவிக்கப்பட்டது. இந்த ஆடை தங்க பல்வகை மெல்லிய ஜேட் கல் துண்டுகளை தங்க நூலினால் கோர்த்து பின்னப்பட்ட ஆடையாகும். அது தங்கத்தில் ஜேட் ஆடைஎன்று அழைக்கப்பட்டது. 1988ல் சீனாவின் ஹொபேய் மாநிலத்தின் மென் சன் மாவட்டத்தில் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக இத்தகைய சிறப்புமிக்க ஆடையை கண்டெடுத்தனர்.

மென் சன் ஹென் கல்லறை சீனாவின் தலைநகர் பெய்சிங்கிலிருந்து 200 கிலோமீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் ஹொபேய் மாநிலத்தின் மென் சன் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் கல்லறையில் சீ ஹென் காலத்தில் ச்சுன்சான் மன்னர் லியூ சனும் அவருடைய துணைவியார் தொ வுவானும் புதைக்கப்பட்டனர். கி.மு.154ம் ஆண்டுக்கு முன் லியூ சன் ச்சுன்சான் மன்னராக நியமிக்கப்பட்டார். 42 ஆண்டுகள் அவர் ஆட்சி புரிந்தார். ச்சுன்சான் நாட்டின் முதலாவது மன்னராக அவர் இருந்தார்.

அவர் புதைக்கப்பட்ட கல்லறை மலையில் அமைந்துள்ளது. மலை முழுவதும் அவருடைய கல்லறைகள் நிரம்பியுள்ளன. படுக்கையறை, வசிப்பிடறை, இசையறை போன்ற பல அறைகளை அந்தக் கல்லறைக் கட்டிடம் கொண்டு ஒரு அரண்மனை போல இருந்தது. சுமார் நூறு பேர் ஒரு ஆண்டு காலம் உழைத்து இந்த கல்லறையைக் கட்டியதாக மதிப்பிடப்படுகின்றது.

பற்பல பொருட்கள் கல்லறையில் ஒழுங்கான முறையில்

அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வெண்கல பொருட்கள், இரும்பு பொருட்கள், தங்க மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவை அதில் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் தங்கத்திலுள்ள ஜேட் ஆடைஉலகப் புகழ் பெற்றது.

தங்கத்திலுள்ள ஜேட் ஆடைவட்டம், சதுக்கம், முக்கோணம், பல முனைகள் ஆகிய பல்வகை வடிவங்களில் உள்ள ஜேட் கல் துண்டுகளால் தைக்கப்பட்டது. 2498 ஜேட் துண்டுகளும் 1100 கிராம் தங்க நூலும் பயன்படுத்தி பின்னப்பட்ட இந்த ஆடையின் நீளம் சுமார் 2 மீட்டர்.

அருமையான தங்கத்திலுள்ள ஜேட் ஆடை தவிர, லியூசன் சவப்பெட்டியில் தங்க வெள்ளி ஊசிகளும் மருத்துவவியல் படைப்புஎன்னும் லோ மொழியில் செதுக்கப்பட்ட வெண்கலக் கிண்ணமும் இருந்தன. இது சீனாவின் பண்டைகால அக்குபஞ்சர் நுட்பத்தையும் மருத்துவவியல் வரலாற்றையும் ஆராய்வதற்கு மிக முக்கிய தகவல்களாகும். லியூசன் உடம்பில் போடப்பட்டிருந்த வாள் பல முறை தீயில் சூடாக்கி அடித்து வார்க்கப்பட்டது. அதன் மேல் ரசாயனப் பூச்சு பூசபு்பட்டுள்ளது. இது சீனாவில் பண்டைக்காலத்தில் துருப்பிடிக்காமல் இரும்புக் கருவிகளைச் செய்யும் சாதனையை எடுத்துக் காட்டுகின்றது.

மென் சன் ஹென் கல்லறையின் பழம்பெரும் மதிப்பை கருத்தில் கொண்டு 1988ல் இந்த கல்லறை மரபுச் சின்னம் என்று சீன அரசால் உறுதிபடுத்தபட்டு முக்கிய தொல் பொருள் பராமரிப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.