களிமண் சிலை 3
中国国际广播电台

மத்திய சீனாவின் ஹெர்நான் மாநிலத்தில் இன்னொரு நிர்வாகப் பிரிவில் களிமண் சிலைகள் உள்ளுர் வழக்கங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றன. பல சிலைகள் தீப விழா, உள்ளூர் ஆன்மாக்களின் விழா மற்றும் ஏனைய விழாக்களில் விற்கப்படுகின்றன. உள்ளூர்ப் பெண்கள் அவைகளை விரும்பி வாங்குகின்றனர்.

இந்த களிமண் சிலைகள் பெரிதும் கைகளால் செய்யப்படுகின்றன. மக்கள் உணவுக் குச்சிகளைக் கொண்டு கோடுகளை வரைந்து, உலர்த்துகின்றனர். பின்னர், நிறம் சேர்க்கிறார்கள். பின்னணிக்கும், அலங்கரிப்புக்கும் வேறுபட்ட நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தப் படம் எட்டுத் தேவதைகளில் சிலவற்றையும், அவைகளில் ஒன்று பின்னோக்கி சவாரி செய்வதையும் காட்டுகின்றன. மக்கள் அந்த எட்டுத் தேவதைகளை அவர்களுடைய சொந்த கற்பனைகள் மற்றும் பின்னணியின் அடிப்படையில் உருவாக்குகின்றார்கள். அந்தப் படத்தில் எட்டுத் தேவதைகளும் தேவதைகளுக்குப் பதிலாக பெரும்பாலும் மனித விவசாயிகள் போல் காணப்படுகின்றன.