பொம்மலாட்டம்
中国国际广播电台
 

நடிகர்கள் பொம்மைகளை பிடித்தவாறு, மரத்தடிகளை உபயோசித்து அவற்றை ஆட்டி நடிக்க வைக்கும் ஒரு வகையான பொம்மலாட்டம் இருக்கின்றது.

பொம்மைகள் வழமையாக சிறியது, நடுத்தரமானது மற்றும் பெரியது என மூன்று அளவுகளில் உள்ளன. வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகையாகப் பொம்மைகள் உள்ளன. படத்தில் உள்ள பொம்மைகள் மரத்தினால் செய்யப்பட்டுள்ளன. மக்கள் வெளிப்பக்கத்துக்கு வர்ணம் பூசுவார்கள். பொம்மைகளின் கண்கள் அசையக் கூடியவையாக இருக்கும் இவ் அமைப்பு பாரம்பரிய இசை நாடகத்தை ஒத்ததாக இருக்கின்றது. அந்தக் கண்கள் மிகைப்படுத்தப்பட்டு கறுப்பாலும், வெள்ளையாலும் வர்ணமிடப்பட்டுள்ளன. மூக்கு பெரிதாகவும் சப்பையாகவும் இருக்கும். இது வாயுடன் தொங்கு மீசையைக் கொண்டிருக்கும். வெள்ளை நிற முக்தில் மீசை, கண்கள் மற்றும் புருவம் கறுப்பு நிறத்தில் வரையப்படுகின்றன.

சீனாவில் பல பகுதிகளில் பொம்மலாட்டக் காட்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பலவேறு இடங்களில் பாணி முக அலங்காரம் மற்றும் செதுக்கல்கள் உள்ளூர் இசை நாடகங்களுடன் கலக்கின்றன.