மரவெட்டுச் சித்திரம்
中国国际广播电台
 

மரவெட்டுச் சித்திரமானது ஹன் வம்ச காலத்தைச் சேர்ந்தது. அவர்கள் தீங்குகளை விரட்டுவதற்கு இதை பயன்படுத்தினர்.

சொங் வம்சத்தில் கி.பி.960-கி.பி.1279மக்கள் புது வருடச் சித்திரங்களைத் தயாரிப்பதற்கு மரக்கட்டை அச்சுக்களைப் பயன்படுத்தினர்.மரக்கட்டை அச்சுக்களால் ஒரே தடவையில் பல சித்திரங்கள் உருவாக்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. எனவே மரவெட்டுச் சித்திரங்கள் வளர்ச்சியடையத் தொடங்கின. இச்சித்திரம் காட்டும் அம்சங்கள் இயற்கை மற்றும் இறைவழிபாட்டில் இருந்து கட்டுக்கதைகள் மற்றும் மானிட வாழக்கங்கள் போன்றவற்றில் இருக்கின்ற சிறந்த வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சிக்கு மாற்றம் அடைந்தன. இச் சித்திரங்கள் சில செய்திகளை விளக்குவதற்கு விலங்குகளைக் குறியீடாகப் பயன்படுத்துகின்றன. உதாரணமாக வெளவால் சிறந்த வாழ்க்கையை குறித்து நிற்கின்றது. Magpaie மகிழ்ச்சியைப் பிரதிநிதித்தவப்படுத்தியது மாணிடச் சித்திரம் பாரம்பரிய வேலைப்பாடுகள் அதிகாரிகளினாலும் மற்றும் அறிஞர்களினாலும் வர்ணம் தீட்டப்பட்ட படங்கள் அல்லது மேற்குத் தேச சிதிதரம் போன்ற பல்வேறுப்பட்டவை இணைக்கப்பட்டுள்ளன. மிங் மற்றும் ச்சிங் வம்சத்தில் மரவெட்டுச் சித்திரங்கள் அதிகம் பிரபலமாக இருந்தன. தியன் ஜின், சுஜோஉ மற்றும் ஷன் துங் போன்ற பல இடங்கள் மரவெட்டுச் சித்திரங்களின் மையங்களாக வந்தன. ச்சிங் வம்சத்தில் பிற்கால்த்தில் மரவெட்டுச் சித்திரங்கள் மேற்கு தேசத்தில் இருந்து வந்த கல் அச்சு அறிமுகத்துடன் படிப்படியாக வீழ்ச்சி அடையத் தொடங்கியது.