ஷன்சி புது வருடச் சித்திரம்
中国国际广播电台
 

ஷன்சி புது வருட சித்தரப் பாணி இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றது. வட ஷன்சியில் உள்ள சித்திரத்தை ஜன்னல்களில் ஒட்டலாம். சித்திரத்தின் கரும் பொருள் இசை நாடக கதைகள் பறவைகள் மிருகங்கள் மலர்கள் மற்றும் காய்கறிகளையும் உள்ளடக்குகின்றது. இது மர அச்சு அல்லது கை வர்ண்மிடல் மூலம் செய்யப்படுகிறது.

சில வேளைகளில் வர்ண அச்சும் பயன்படுத்தப்படுகின்றது. ஷன்சி மாநிலத்தில் மக்கள் கதவுகளின் மேல் அல்லது வீட்டின் உள்பக்கத்தில் ஒட்டுகின்றார்கள். புத்த மத பிரார்த்தனைக்கான சித்திரங்கள் விளக்கு உறைகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்படுகின்றன. பிரகாசமான நிறங்களான சிவப்பு, மஞ்சல், இளஞ்சிவப்பு, கறுப்பு அல்லது பச்சை போன்ற நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த சித்திரங்கள் பல தெய்வங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. சித்திர அமைப்புக்கள் ஒரே சீரானதாகவும் வேறுபட்டும் காணப்படுகின்றன. சித்திரங்களில் மக்களின் உள வெளிப்பாடுகள் இயற்கையாக இருக்கிறது. பயன்படுத்தப்பட்ட நிறங்கள் பிரகாசமானதாகவும் முற்காலத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கின்றன.