துணிப் புலி
中国国际广播电台

துணிப் புலி சீனாவில் ஒரு பிரபலமான நாட்டுப்புறக் கலையாகும். சீன மக்கள் புலியை தீங்குகளை நீக்கி செல்வத்தை பாதுகாப்பதற்கு ஒரு குறியீடாகக் கருதுகின்றனர் டிராஹன் படகு விழாவில் மக்கள் துணிப் புலிகளை செய்வதற்கு அல்லது நெற்றியில் புலிப் படங்களை வரைவதற்கு விரும்புகின்றார்கள். இது ஆரோக்கியத்தையும் பலத்தையும் தைரியத்தையும் கொண்டுவரும் என நம்புகின்றார்கள்.

பல்வேறு வகை துணிப் புலிகள் உள்ளன. இதற்கு பயன்படுத்துகின்ற பொருட்களும் செய்முறைகளும் விதிதயாசமானவை வடிமையாக மக்கள் பருத்தி அல்லது பட்டுத் துணிகளைப் பயன்படுத்தி இதற்குள் மரத்தூள் அல்லது உமியை இட்டு நிரப்புகின்றார்கள். மக்கள் முகவர்ணனையை வரைவதற்கு, அளங்கரிப்பு வேலைப்பாடுகளுக்கு நிறம் தீட்டுதல், தையல் வேலைகள், வெட்டுதல் அல்லது ஒட்டுதல் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். மக்கள் துணிவையும் தைரியத்தையும் காட்டுவதற்கு வடிமையாக புலிகளைப் பெரிய தலை, பெரிய கண்கள், பெரிய வாய் மற்றும் பெரிய வால் என்பவற்றுடன் உருவாக்குகிறார்கள்.

மறுபுறத்தில் டிராஹன் படகு விழா மற்றும் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களான வசந்த விழா அல்லது தீப விழாக்களில் மக்கள் துணிப் புலிகளை தீங்களை நீக்குவதற்கு நோய்களைத் தடுப்பதற்கும் மற்றும் சிறந்த வாழ்க்கை போன்றவற்றுக்குமாக உருவாக்குகிறார்கள்.