திணிப்புப் பை
中国国际广播电台

திணிப்புப் பை என்பது மக்கள் எடுத்துச் செல்லுகின்ற ஒரு சிறிய அலங்காரப் பொருள். இதில், பாரம்பரிய சீன மருந்துக் கலவைகள் நிரப்பப்பட்டு இருக்கும். இதன் வடிவமைப்புக்களில் வேற்படும். இதை மக்கள் துஷ்ட தேவைகளை நீக்குவதற்காக சந்திர நாள் காட்டின்படி மாதத்தின் ஐந்தாம் நாள் எடுத்துச் செல்கின்றனர். இது உடல் ஆரோக்கியத்துக்குரியதாக கூறப்படுகின்றது. பல்வேறுபட்ட திணிப்பு பைகள் காணப்படுகின்றன. சில பிரமிடுக்களின் வடிவத்தை ஒத்தன. அதேநேரத்தில் எனையவை பீச் பழத்தை அல்லது வெளவால் போல் இருக்கின்றன. இவைகள் எல்லாம் சிறந்த வாழ்க்கை மற்றும் மங்களகரம் போன்ற அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன.

 
படத்தில் காணப்படும் திணிப்புப் பை ஒரு தேரையைக் பன்னிரண்டு மிருகங்கள் சூழ்ந்துள்ளன. உலகத்தின் பன்னிரண்டு துறைகளை இவை பிரதிபலிக்கின்றன. பன்னிரண்டு கட்டுக் கதையில் தேரைக்கு சந்திரனுடன் ஏதோ தொடர்பு இருப்பதாகவும், எல்லாப் பன்னிரண்டு மிருகங்களும் நல்ல வாழ்க்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. படத்தில் உள்ள திணிப்புப்பை பிரகாசமான சிவப்பு நிறத்தில் நுட்பமான கைத் தையல் வைலைப்பாடுகளுடன் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.