மியாஓ இனத்தின் கைத்தையல்刺
中国国际广播电台

தென்மேற்கு சீனாவின் குய் சோ மாநிலத்தில் பல மியாஓ இன மக்கள் வசிக்கின்றார்கள். அவர்கள் பல வகை ஆடைகளைக் கொண்டிருக்கிறார்கள். இவை அடிப்படையாக அன்றாட உடைகள் அல்லது சம்பிரதாய உடைகள் என பிரிக்கப்படுகிறது. ஆடைகள் மற்றும் தலை அலங்காரம் ஆகிய இரண்டும் பல கைவேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. டிராஹன், பறவை, மீன்மேளம், மலர், வண்ணத்துபூச்சி அல்லது வரலாற்றுக்கதைகள் இதில் சித்திரிக்கப்படுகின்றன. இதில் மேலாடையில் உள்ள சித்திரம் பல கைத் தையல் வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றது.

மியாஓ கைத் தையல் சித்திரங்களுக்கு இடையில் டிராஹன் வேலைப்பாடு தொட்ச்சியாகக் காணப்படுகின்றது. சட்டைகளின் கைப்பகுதிகளிலும் சித்திரங்கள் வேலைப்பாடுகளைக் காட்டுகிறன. டிராகனை விட வண்ணத்து பூச்சிக்கள், பறவை, மனிதர்கள் போன்ற ஏனையவையும் உள்ளன. சில வேளைகளில் வேலாப்பாடுகள் அதிகமாக இருப்பதோடு, கறுப்பு வெள்ளை அல்லது பச்சை போன்ற நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.