நீண்ட ஆயுள் பூட்டு
中国国际广播电台

நீண்ட ஆயுள் பூட்டு சிறந்த வாழ்க்கை மற்றும் மங்களகரத்தையும் குறிக்கும் ஓர் குறியீடாகவும் குழந்தைகள் அணியும் ஓர் அலங்காரப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டது. இது வெள்ளியினால் தயாரிக்கப்பட்டு கழுத்தில் கட்டி தொங்விடப்பட்டது. பழையகாலத்தில் குழந்தைகளுக்கு ஒரு வயதான போது உறவினர்களும், குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு ஒரு அன்பளிப்பாக இந்த பூட்டைக் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இந்தப் பூட்டை அவர்கள் வளர்ந்து திருமணம் செய்யும் வரை கழற்ற மாட்டார்கள்.

பழைய காலத்தில் குறைந்து மருத்துவ வசதிகள் மற்றும் குறைந்த பொருளாதார நிலைமை காரமாக பல குழந்தைகள் இறந்தார்கள். பெற்றோர்கள் குழந்தைகளின் நீண்ட ஆயுளை வேண்டி கடுவுளை வழிபட்டார்கள். நீண்ட ஆயுள் பூட்டானது துஷ்ட தேவதைகளையும் தீங்குகளையும் விரட்டிட பயன்படுத்தப்பட்டது. இது பொதுவாக சில வடிவமைப்புகளை கொண்டிருந்தது.

படத்தில் உள்ள நீண்ட ஆயுள் பூட்டு செலவந்தனாக இருக்கிற ஒரு எழுத்தை கொண்டிருக்கிறது. எழுத்துக்குக்கீழ் மூன்று தேசங்கள் காலத்தில் உள்ள கி.பி. 1220-280ஒரு கதையின் சித்தரம் இறுக்கிறது. நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் குறித்து நிற்கின்ற வேலைப்பாடுகள் உள்ளன. வேலைப்பாடுகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இருப்பதுடன் எழுத்துக்கள் மேடைக் கதைகளில் இருந்து எடுக்கப்படுகின்றன.