பை இன ஆடைகள்
中国国际广播电台

தென்மேற்கு சீனாவில் யுன்னான் மாநிலத்தில் 20 சிறுபான்மை இனங்கள் வசிக்கின்றன. அவர்கள் எளிமையான அல்லது சிக்கலான வடிவங்களைப் பின்னுவதற்கு வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்துகின்றார்கள். இப்பின்னல் திறன் நீண்ட காலமான 2000 அல்லது 3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி இன்றும் தொடர்ந்து வருகின்றது.

தாலி என்ற இடத்தில் உள்ள பை இன மக்கள் மலர்களின் வடிவமைப்புகளை பின்னுவதற்கு விரும்பினார்கள். தலைத் துணி, இடுப்புப்பட்டை அல்லது காலணிகள் போன்றவற்றில் இந்த வடிவமைப்புக்கள் காணப்படும். அந்தச் சித்திரங்கள் வெள்ளை தலைத் துணி நீண்டு குஞ்சங்கள் மற்றும் திருமணமாகாத பெண்களின் நிலையைக் காட்டுவதற்கு ஒரு சிவப்பு தலை மயிர்க் கொண்டை மாலை போன்றவற்றுடன் ஒரு பை பெண்ணின் ஒரு பொதுவான ஆடையைக் காட்டுகின்றன. அவள் வெள்ளைப் பொத்தான்கள் மற்றும் முன்புற பொத்தான்கள் இடப்பட்ட ஒரு நீலநிற சீனப் பாணியிலான சட்டையுடன் ஒரு நாவல்கலர் கோட் அணிகிறாள். பாவாடையின் இடுப்புப்பட்டை மீது பூத்தையல் சித்திரங்கள் உள்ளன. ஆடை எளிமையாக இருக்கிறது.