சீனர்களின் தேய்வர்கள் 6
中国国际广播电台

குவான் இன் குவான் ஷி இன், குவான் சி சை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் போதித்துவர். சீனப் பௌத்தத்தில் முதலில் தோன்றியவர். குவான் இன் வழிபாடு சாதாரன சீன மக்களிடையே மிகப் பிரபலமாக இருக்கிறது. இம்மக்கள் இப்பெண் தெய்வத்தை மிகக் கருணை நிறைந்தது என்றும் மிக இரக்கம் நிறைந்தது என்றும் அழைத்தனர். போதிச்த்வா குவான் இன் வறியவர்களுக்கு உதவி செய்வதுடன் துயரத்தை நீக்குகின்றது.

மன்னித்தல், இரக்கம் மற்றும் கருணை என்பன சீனர்களின் நிலையில் பெண்மைக்குரிய அடிப்படையான குணவியல்பாகக் கருதுப்படுகின்றது. தாங் வம்ச கால்திதல் குவான் இன் ஒரு தெய்வமாகவும், மேற்கேயுள்ள சுவர்க்கப்ப பிரபுவின் ஒரு தோழியாகவும் வர்ணிக்கப்பட்டது. இது மேற்கேயுள்ள சுவர்க்கத்துடன் குவான் இன் ஒன்றியணைப்புக்கு இட்டுச் சென்றது. இதிலிருந்து இது மேற்கு சிவாங்முவின் தாயின் ரஒய்ஸ்ட் அரசியின் இயல்புகளுடன் கலந்து கொள்வதற்கும் இட்டுச் சென்றது. பின்னர் தியன் கௌ தெய்வத்தின் இயல்புகள் குழான் இன்னினால் உள்வாங்கப்பட்டன. பின்னர், இது மாலுமிகளின் தெய்வமாகவும், கடலின் மீது செல்வோரின் பாதுகாவல் தெய்வமாகவும் நோக்கப்பட்டது.