தாள் குதிரை அச்சு
中国国际广播电台
 

தாள் குதிரை பலிப்பீடத்தில் எரிக்கப்படுவதற்கான சிலைகளின் படங்கள் அச்சிடப்பட்ட ஒரு வகை தாளாகும். இது கைச்சித்தரத்துடன் சேர்க்கப்பட்ட ஒரு மர அச்சுக்கவடு ஆகும். இதில் சிவப்பு அல்லது பச்சை நிறங்கள் படத்தில் ஒட்டுத் துண்டுகளை வரைவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

தென்கிழக்குச் சீனாவின் செ ஜியாங் மாநிலத்தில் உள்ள தாள் குதிரை அச்சானது மரம் மற்றும் வர்ண அச்சுக்களை கொண்டிருக்கவில்லை. மாறாக, இது கலர் சித்திரம் தொடுகோடுவரைதல் போன்ற பல ஏனைய நுட்படுமுறைகளை கொண்டுள்ளது. இது நுட்ப முறைகளிலும் அல்லது கருவைத் தெரிவு செய்தல் ஆகிய இரண்டிலும் இதனுடைய சொந்தப் பாணியைக் கொண்டிருக்கிறது. எல்லா நுட்பமான அம்சங்களும் படத்தில் உள்ளன.

புதுவருடப் படங்குள் அல்லது தாள் அச்சுக்களில் பணச் சேகரிப்பு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இது நிதிவளங்கள் நிறைந்து இருப்பதை குறிக்கிறது. படத்தில் அரச மெய்ப்பாடு காவலன் மற்றும் செல்வத் தெய்வம் என்பன அதிகாரபூர்வ தொப்பிகளையும் சிவப்புச் சீருடைகளையும் அணிந்த ஒன்றுபோல் தோன்றுகிறன. இதன் அருகில் நான்கு பரிவாரங்களும் உள்ளன. அரச மெய்க் காவலன் முன்புறம் அமர்கிறான். முன் உள்ள மேசையின் அவன் ஒரு தராசு இருக்கிறது. இவை தங்கம் அல்லது வெள்ளியிலான காலணி வடிவில் உருவாக்கப்பட்ட உருக்குக் கட்டிகள் உள்ளன.