தி சி
中国国际广播电台

தி சி என்பது தென்மேற்குச் சீனாவில் குய் சௌ மாநிலத்தில் குறிப்பாக ஆன் சுன் பிராந்தியத்தில் உள்ள ஒரு வகை உள்ளூர் இசை நாடகமாகும். இந்த இசை நாடகத்தை நாட்டுப்புறங்களில் வசந்தகால மற்றும் தீப விழாவில் காணலாம். மக்கள் இதைத் தீங்குகளை நீக்கி மகிழ்ச்சியாக இருப்பதற்கு நடிக்கிறார்கள் இவை மூன்று தேசங்களின் கற்பனைக்கதை மற்றும் சுய் மற்றும் தாங் வம்சங்களின் கட்டுக் கதை போன்ற இராணுவ இசை நாடகப் பிரிவுகளாக மட்டும் உள்ளனஸ்ரீ குடூரமான கதாபாத்திரங்கள் இந்த இசை நாடகத்துக்குள் சேர்க்கப்படுகின்றன. முகமூடிகள் மிகப்படுத்தியும் கவனமாகவும் செய்யப்பட்டுள்ளன.

கைவினைஞர்கள் முகமூடிகளை பொது மக்கள் அதிகாரி, ராணுவ அதிகாரி, இளம் அதிகாரி, வயதான அதிகாரி மற்றும் பெண் அதிகாரி என 5 வகைக்குள் பிரிக்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களின் தலைக்கவசத்தில் டிராகன்கள் பீனிக்ஸ் பறவைகள், தேனீக்கள் மற்றும் வண்ணாத்திப் பூச்சிகள் போன்ற வேறுபட்ட வேலைப்பாடுகள் வரையப்பட்டிருக்கின்றன. பட்ததில் ஒரு ராணுவ அதிகாரியின் அவலட்சணத்தையும் துணிவையும் காட்டுவதற்கு ராணுவ அதிகாரி மிகைப்படுத்தப்பட்டுள்ளார்.