பீங்கான்பகுதி4
中国国际广播电台
 

நீலம் மற்றும் வெள்ளைப்பீங்கான் ஜாடிகள் யுவன் வம்சத்தில்கி.பி.1206-கி.பி.1368பல பீங்கான் சூளைத்தளமும் குசவர் ஜாதியினரும் இருந்த போது அதிகம் பிரசித்தி பெற்று இருந்தது.

நீலம் மற்றும் வெள்ளை நிறப்பீங்கான் ஜாடிகள் குசவ ஜாதியினரால் உற்பத்தி செய்யப்பட்டன. இவை எல்லா இடங்களிலும் காணப்பட்டதுடன் இதன் மொத்த உற்பத்தியானது சூளைத்தளங்களை விட மிகையாக இருந்தது. காடுமுரடு அல்லது நேர்த்தியானது எனப் பல்வேறு பாணிகள் இருந்தன. சாதாரன மக்கள் தரம் குறைந்தவற்றை வாங்கிய போது அலுவலர்களும் செல்வந்தர்களும் உன்னதமான கலை அழகு நிறைந்த மட்கலங்களை வாங்கினார்கள்.

குயவ ஜாதியினரால் உற்பத்தி செய்யப்பட்ட நீலம் மற்றும் வெள்ளை நிறப்பீங்கான் ஜாடிகள் தெளிவானதாகவும் எளிமையானதாகவும் அடக்கமானதாகவும் இருந்தன. தெரிவு செய்யப்பட்ட விஷயங்கள் சமூக வழக்கங்கள், கட்டுக்கதைகள், இயற்கைக் காட்சிகள், மிருகங்கள், காய்கறிகள், கவிதைகள் மற்றும் பாடங்கள் எனையவை என ஓர் பரந்த தலைப்புகளின் வீச்சை உள்ளடக்கியுள்ளன. படத்தில் உள்ள பீங்கான் ஜாடி மாதிரிக்கிண்ணமானது எளிமையாக இருக்கிறது. இரண்டு பக்கத்திலும் வேலைப்பாடுகள் வரையப்பட்ட கிண்ணத்தின் மேற்பரப்பின் மீது ஒரு வரிசை அலங்காரம் இருக்கிறது. கிண்ணத்தின் அடிப்பகுதி வெப்பத்தைத் தடுப்பதற்கும் உறுதியாக நிறுத்துவதற்கு உதவியாகவும் வன்மையாக இருக்கிறது. தோற்றம் மற்றும் அசைவு மீது குவிகின்ற கிண்ணத்தின் மத்தியில் அலங்காரம் இருக்கின்றது.