பீங்கான்பகுதி8
中国国际广播电台
 

 சீன வரலாற்றில் குயவர்கள் செல்வாக்குச் செலுத்தி குவன் சூளைகளுக்கு பலத்தைச் சேர்த்தார்கள். படத்தில் உள்ள ஒயின் ஜாடி யு கு சுன் பிங்க்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இது ஹேபெய் மாநிலத்தில் சிஜோவில் அநேகமாக உற்பத்தி செய்யப்பட்டது. இந்த அச்சுத்தயாரிப்பு சொங் மற்றும் யுவான் வம்சத்தில்1014ம் நூற்றாண்டுதோன்றி, மிங் மற்றும் ச்சிங் வம்சத்திலும்1419ம் நூற்றாண்டுதொடர்ந்தது. இந்தக் குடிக்கும் பாத்திரம் பார்ப்பதற்கு விரும்பமானதாகவும் அத்துடன் எல்லா வம்சத்து மக்களும் இதைப் பற்றி அறிந்து இருந்தனர்.

யு கு சுன் பிங், எளிய அச்சுத்தயாரிப்பைக் கொண்டிருக்கிறது. ஜாடியின் வாய் கொஞ்சம் அதிகமாக வழவழப்பாக்கப்பட்டது. இதனுடைய அழுத்து நேர்த்தியாக தோற்றமளிக்கின்றது. வட்டமான அடிப்பகுதி ஒரு இறுக்கமான பலத்தைக் கொண்டிருக்கின்றது. தளம் மிகச் சிறியதாகவும் உறுதியானதாகவும் இருக்கும். இது சிறிதளவு குறைத்தால் மிகவும் இளைத்திருக்கும் என்பதையும் சற்று அதிகரித்தால் மிகவும் பருத்து இருக்கும் என்ற ஒரு எண்ணத்தையும் மக்களுக்குக் கொடுக்கின்றது. வாயில் பழ இரசத்தை ஊற்றுவதற்காக இருக்கின்றது. இது முழுவதும் அலங்காரம் இன்றி பளபளப்பாக்கப்பட்டிருக்கின்றது.