தெற்கில் களிமண் கட்டிடம்
中国国际广播电台
 

களிமண்ணைச் சுவராகப் பயன்படுத்தும் களிமண கட்டிடங்கள், அதிகமாக தென் சீனாவின் ப்புஜியான் மாநிலத்தில் காணப்படுகின்றன. இது ஹேக்கா களிமண் கட்டிடம் எனவும் அழைக்கப்படுகின்றது.

களிமண் கட்டிடங்கள் வட்டம் சதுரம், நீள் சதுரம், அரைவட்டம், நீள்வட்டம் எனப்பல வகைகளைக் கொண்டிருக்கலாம். வட்டக்களிக்கட்டிடம் ஓர் அடைப்புக் கட்டிடம் ஆகும். வெளிச்சுவர் ஒரு மீட்டர் கனத்தில் பூமியை இடித்து கட்டப்பட்டிருக்கின்றது. இது மத்தியில் ஒரு சுவருடன் பல அடுக்குகளைக் கொண்டிருக்கின்றது. கீழ்த்தளம் சமையலறையாகப் பயன்படுகின்றது. இது சன்னலைக் கொண்டிருப்பதில்லை. தானியங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் போட்டுவைக்க இரண்டாவது மாடி களஞ்சியமாக பயன்படுத்தப்படுகின்றன. மூன்றாவது மாடி மற்றும் அதற்கு மேல் இருப்பவை மடுக்கை அறைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. அறைகளுக்குச் செல்லும் நடைபாதை மக்கள் நடப்பதற்காக உள்ளது. கதவுகளும் யன்னல்களும் இப்பாதையை நோக்கியவாறு உள்ளன.

 

மக்கள் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட இப்பெரிய கட்டிடத்தை தாங்கலாம் என்பதற்காக பல வேலைகளில் தொடர்புபட்டிருக்கின்றது.