வாங்கினுடைய வளாகம்
中国国际广播电台
 

இந்த வளாகம் தெற்குத் தையுவான் நகரில் ஒறத்தாழ 150 கிலோமீட்ர் தொலைவில் உள்ளது. வாங் வியாபார முயற்சி மிங் வம்ச காலத்தில் ஆரம்பமானது. இது ச்சிங் வம்ச மத்திய காலத்தில் செழிப்பாக, ஒரு குழுமமாக வளர்ந்தது. இது பண்ணை, வர்த்தகம் அதே போன்று அரசியல் போன்றவற்றை தனஅனகத்தை கொண்டிருந்தது. ஒரு மிகப் பெரிய மாளிகை இந்த அதிகாரபலம் உள்ள குடும்பத்தின் புகழுக்கு ஒரு நாபகச்சின்னம் போன்று கட்டப்பட்டது. கட்டிட நிர்மானம் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு மேல் நீடித்தது.

கட்டிடம் 31956 சதுர மீட்டருக்கு7.9 ரக்கர்மேலான ஒரு பரப்பளவு வரை நீண்டு இருந்தது. இது ச்சியேள மாளிகைத் தொகுதியின் அளவில் நான்கு மடங்கு ஆகும். இது, 54 முற்றங்களையும் 52 அறைகளையும் கொண்டுள்ளது. வாங் வளாகம் கீழைத்தோச கட்டிடக் கலையின் சத்திரிப்பாக இருக்கின்றது.

கட்டிடங்கள் மலையை ஒட்டி, அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டிடங்கள் ஒரு loess சரிவின் மீது ஒரு பலப்படுத்தப்பட்ட மறை சுவரினால் பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு இது ஓர் உண்மையான கோட்டையாக உருவமைப்புப் பெற்றுள்ளது. கிழக்கு வாசல் 2000 மீடடர்6562 அடிஉயரத்தில் எழந்து நிற்கின்ற மியன்ஷான் மலையை நோக்கியுள்ளது. கட்டிடங்களின் உள்பக்கம் கேள ஜியயா, ஹுங் மென்பாவ் மற்றும் பூர்வீகக் கோயில்கள் என அறியப்படுகின்ற மூன்று பிரிவுகளாக உள்ளது.

கேள ஜியயா அல்லது கிழக்கு முற்றங்கள் ஒரு தொடர் குடியிருப்புக்கக் கொண்டிருக்கிறது. இம்மலைகள் ஒரு ஒழுங்கான கோட்டை அமைப்புக்குள் சுவரிடப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் முன்பக்கத்தில் பாரம்பரிய மண்டப அமைப்பைக் கொண்டு, பின்புறத்தில் படுக்கையறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு முக்கியமான நிலைகள் ஒவ்வொன்றிலும் வாயில் கதவுகள் உள்ளன. அவை வேறுபட்ட முற்றங்களுக்கான வழிகளைக் கொடுக்கின்றன.

கட்டிடங்கள் ஒழுங்காக மலைப்பக்கத்தை நோக்கி பரந்து இருப்பதுடன் அவை ஆறு இணை கட்டிடத்தொகுதிகளாக வரிசையாக இருக்கின்றன. மத்திய பகுதியில் மூன்று பிரதான முற்றங்கள் வேறுபட்ட அளவில் உள்ளன. கட்டிடத் தொகுதிக்கு கிழக்கே சமையல் அறை உள்ளது. இவற்றுக்கு மேற்கே, தனியார் பாடசாலை மற்றும் பூந்தோட்டத்துக்கும் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒரு ரகசியமான பாதை ஓர் அவசர வழியை வழங்குகின்ற தோட்டத்தின் மலர் நிலவறைக்கு இட்டுச் செல்லுகின்றது. கட்டிடத்தொகுதியின் வடக்கில் பதின் மூன்று பாதுகாப்பான வசிப்பிடங்கள் ஒரு வரிசையாக உள்ளன.

மிக உயரமான நிலையில் ஆதிக்கம் செலுத்தி அமைந்து இருக்கும் இவ்வசிப்பிடங்கள் முழுப்பிரதேசத்தை மேலே இருந்து நோக்குவதுடன் இது ஒரு கண்காணிப்புக் கோபுரமாகவும் விளங்குகிறது. முற்றத்திற்குள் ஒரு முற்றம், கதவை அடுத்துக்கதவு மற்றும் வீட்டுக்கு மேல் வீடு என்ற ஒழுங்கமைப்பு ஒரு அடுக்கடுக்கான உலகத்தை உருவாக்கின்றது.

ஒரு கற்பாலம் ஹஒஜியயாவில் இருந்து கொங்மென்பாஓக்கு அல்லது மேற்கு முற்றங்களுக்கு செல்கின்ற ஒரு அகழிக்கு குலுக்கே இருக்கிறது. முழுமையாகவும் நன்றாகவும் வடிவமைக்கப்பட்ட கோட்டை கட்டிடத்தொகுதி போன்ற இன்னொரு அமைப்பு இருக்கிறது. இத்தொகுதி கிழக்கில் இருந்து மேற்கே 105 மீட்டர்344 அடிஅகலத்தையும் தெற்கில்இருந்து வடக்கே 180 மீட்டர்591 அடிநீளத்தையும் கொண்டிருக்கிறது. இந்தக்கட்டிடத்தொகுதி ஒரே ஒரு வாயிலை மட்டும் கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பாகும். இந்த கதவு சிவப்பு நிறம் திட்டப்பட்டுள்ளதுடன் சிவப்புக் கதவுக் கோட்டை என்ற பொருள்படும் கொங்மென்பாஒ என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மறைப்புச் சுவர் எட்டு மீட்டர்20 அடிஉயரத்தை அதன் வெளிப்பக்கத்திலும் ஆனால் உள்பக்கத்தில் நான்கு மீட்டர்13 அடிஉயரத்தை மட்டும் கொண்டுள்ளது. இது கரும் கற்களால் கட்டப்பட்டதுடன் ரெத்தாழ இரண்டு மீட்டர்6.7 அடிதடிப்பையும் உச்சியில் கொத்தளங்களையும் கொண்டிருக்கிறது. பிரதான முற்றங்களுக்குள் பாதுகாப்பான வசிப்பிடங்கள் உள்ளன. அவைகளுக்கு அப்பால் ஒரு இரண்டு பாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்குள் நடமாட்டம் ஒரு வீதியினால் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வீதி நீளவழியாக செல்வதுடன் அவை மூன்று பாதைகளால் சிலுவை போன்று இடைவெட்டுகின்றன. அவைகள் உருவாக்குகின்ற வடிவமைப்பு குடும்பப் பெயரான வாங்கின் சீன எழுத்து போன்று ஒரே மாதிரியாக இருக்கின்றன.

அவர்களுடைய வேறுபடுத்தப்பட்ட நிலையின் மத்தியிலும் வாங் குடும்பம் அடக்கமான ஆரம்பங்களைக் கொண்டிருந்தனர். மாளிகையானது சாதாரண மக்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு பிரபலமான பாணியுடன் ஓர் கெளரவமான உயர் குடும்பக்கட்டிடக்கலையின் பாணியை இணைக்கின்றது.

அலங்காரம் எல்லா பக்கத்திலும் பைன் மரங்கள், மூங்கில மற்றும் மலர் கொத்து போன்றவற்றின் உருவங்களின் பாவனையை ஒரு பரந்த அளவில் உருவாக்குகின்றது. இவை அறிஞர்களால் மனித நற்பண்புகளின் குறியீடுகள் எனக் கொள்ளப்படுகின்றன.