ழவாபு
中国国际广播电台


ழவாபு

ழவாபு என்பது ஒரு வகை நரம்பிசைக் கருவியின் பெயர். சீனாவின் உய்கூர், தாஜிக் மற்றும் உஸ்பெக் இன மக்களை இவ்விசைக் கருவியை மீட்டுகின்றனர். 14வது நூற்றாண்டில் தோன்றிய இவ்விசைக் கருவி, இதுவரை சுமார் 600 ஆண்டு வரலாறுடையது. அப்போது, சிங்ஜியாங் மற்றும் உள் நாட்டு,வெளிநாட்டுத் தேசிய இனங்களுக்கிடையிலான பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறைகளிலான பரிமாற்றம் பரந்த அளவில் நடைபெற்றது. உய்கூர் இன மக்கள் அவர்களுடைய ஏற்கெனவேயுள்ள நாட்டுப்புற இசைக்கருவிகளின் அடிப்படையில் அந்நிய இசைக் கருவிகளின் மேம்பாட்டை ஏற்றுக்கொண்டு, சில புதிய வகை இசைக் கருவிகளைத் தயாரித்துள்ளனர். ழவாபு எனப்படும் இசைக் கருவி, இவ்வற்றில் முக்கியம் வாய்ந்த ஒரு வகையாகும்.

இத்தகைய இசைக்கருவி, வெட்டு மரத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் வடிவம் தனிச்சிறப்பியல்பு வாய்ந்தது. அதன் மேற்பகுதி மெல்லியது, நீளமானது. அதன் மேற்பகுதியின் நுனி வளைந்தது. அதன் கீழ் பகுதியின் முனையில் அரை பந்து வடிவில் இசையதிர்வு எழுப்பும் குடம் உள்ளது.

இந்த இசைக்கருவியானது, 3, 5, 6, 7, 8 அல்லது 9 தந்திகளைக் கொண்டது. இதை இயக்கும் போது, அதன் மிக வெளிப்புறத்திலான தந்தி பயன்படுத்தப்படுவது வழக்கம். ஏனைய தந்திகளும் எதிரொலிப்பை முழங்கும்.

இவ்விசைக்கருவியின் ஒலி பெரியது, தெளிவானது, தனிச்சிறப்புடையது. பொதுவாக, இவ்விசைக்கருவி, தனிக்குரல் இசை, கூட்டுக்குரலிசை அல்லது இணைக்குரலிசையாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. இவ்விசைக்கருவியை இயக்கும் போது, சரியாக அமரவோ நிற்கவோ வேண்டும். இரண்டு தோள்களும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். இசை இயக்குப்பவர் இவ்விசைக் கருவியை தன் மார்புக்கு முன் வைத்து, அதன் குடத்தை வலது கை முழங்கையின் நடுப்பகுதியில் போட்டு, இடது கையால் இதை ஏந்திய வண்ணம் விரலால் தந்தியைத் தொட்டு, இசையின் அளவை நிர்ணயிக்கலாம்.

ழவாபு இசைக்கருவியின் வடிவம் பலவிதமானது. உய்கூர், தாஜிக் மற்றும் உஸ்பெக் இன மக்கள் சிங்ஜியாங் உய்கூர் தன்னாட்சிப் பிரதேசத்தில் வாழ்ந்த போதிலும், இவ்விசைக் கருவிக்கு, அவர்கள் வெவ்வேறு பெயர்களைச் சூட்டியுள்ளனர். தாஜிக் மக்களிடையில் ழவாபு, ழபுப் என அழைக்கப்படுகின்றது.

எனது ழபாபு என்னும் இசையைக் கேட்டு மகிழுங்கள