லியுசின்
中国国际广播电台

        லியுசின் வில்லோ மர இலை வடிவ இசைக்கருவி

லியுசின் என்னும் ஒரு வகை இசைக்கருவி, வில்லோ மரப்பலகையால் தயாரிக்கப்பட்டது. அதன் வடிவம், விலேலோ மரத்தின் இலை போல இருப்பதால், வில்லோ மர இலை இசைக்கருவி என அழைக்கப்படுகின்றது. இத்தகைய இசைக் கருவியின் வடிவமும் அமைவும் பிபா எனும் இசைக்கருவி போல உள்ளது. துவக்கத்திலான லியுசினின் கட்டமைவு மிகவும் எளிதானது. நீண்ட காலமாக அது, சீனாவின் சாங்துங், அன்ஹுவெய், ஜியாங்சு ஆகிய மாநிலத்தில் மக்களிடையில் பரவிவருகின்றது. உள்ளூர் இசை நாடகத்தில் அது பயன்படுத்தப்பதுவதுண்டு.

இவ்விசைக்கருவியை இயக்கும் வழிமுறை, பிபாவை இயக்கும் வழிமுறை போன்றது.

இன்று லியுசின் எனப்படும் இசைக் கருவி, சீன இசைத் துறையில் பல்வேறு பங்கு வகிக்கின்றது. தேசிய இன இசைக் குழுவின் தந்தி தொடும் இசைக் கருவிகளில் இவ்விசைக் கருவி, உயர் குரலொலி இசைக்கருவியாகும். அதன் ஒலி இதர இசைக்கருவிகளின் ஒலியினால் பாதிக்கப்படாது. இதர இசைக்கருவியின் ஒலியுடன் இணையாது. தவிர, மேலை நாட்டு இசைக்கருவியான மெடுலின் இசைக்கருவியிலிருந்து வெளிவரும் ஒலி பயன் அதற்கு உண்டு. தனிச்சிறப்பு வாய்ந்தது.

இலவம்பஞ்சு மலர் மலர்கின்றது என்னும் இசையைக் கேளுங்கள்.