ஹொபுஸ்
中国国际广播电台

ஹொபுஸ்

ஹொபுஸ் என்பது, ஒரு வகை தொன்மை வாய்ந்த நரம்பிசைக் கருவியின் பெயர். மங்கோலிய மக்கள் இதை மிகவும் விரும்புகின்றனர். கி.மு. முதலாவது நூற்றாண்டின் துவக்கத்தில் வட சீன மக்கள் ஹென் இன மக்களின் இசைக்கருவியை ஆராயந்த பின், இப்புதிய இசைக்கருவியைத் தயாரித்தனர்.

பழைய ஹொபுஸின் வடிவம் ஒரு பெரிய அகப்பை போல இருந்தது. அதன் நீளம் 90 சென்ட்டி மீட்டர். இவ்விசைக்கருவியின் மேற்பகுதி நுனி வளைந்து இருக்கும். அதன் தண்டு நேரானது. வட்டமான ஆர்மோனியத்தின் வெளிப்புறத்தில் பாம்புத் தோலால் மூடப்பட்டது. அது, 3 அல்லது 4 தந்திகளைக் கொண்டது. அதன் தண்டு நீளமானதாகவும் ஆர்மோனியம் சிறிதாகவும் அதன் வெளிப்பறத்தில் பாம்புத்தோலால் மூடப்பட்டதாகவும் இருப்பதால், அதன் ஒலியில், வட பகுதி புல்வெளி மணம் கமழுகின்றது. இவ்விசைக்கருவியை இயக்கும் முறை, இதர நரம்பிசைக் கருவியை மீட்டும் முறை போன்றது. இசை இயக்குப்பவர் இவ்விசைக் கருவியை நெருக்கமாக வைத்து, இடது கையால் தந்தியை வருடி, வலது கையின் பெரு விரல் மற்றும் சுட்டு விரல்களால் இசை மீட்டுவார். இவ்விசைக்கருவியின் ஒலி தெளிவானது. இனிமையானது. தனிக்குரல் இசை, கூட்டுக்குரலிசை அல்லது ஆடல் பாடலுக்கு இணைக்குரலிசையாகப் பயன்படுத்துவதுண்டு.

ஹொபுஸ் என்னும் பெயர், 13வது முதல் 14வது சீன வரலாற்று நூலான யுவான் வரலாற்று குறிப்பில் காணப்படலாம். அப்போது, அது, அரசு நிலை இசைக்கருவிகளில் சேர்க்கப்பட்டது. அடிக்கடி, மாபெரும் விருந்தில் இயக்கப்படுவது வழக்கம். பின்னர், அது மக்களிடையில் பரவியது. பல காரணங்களினால், சிங் வமிசக் காலத்துக்குப் பின் அது படிப்படியாகப் பரவாமல் போயிற்று. நவ சீனா நிறுவப்பட்ட பின், இசையமைப்பாளர்களின் முயற்சியினால், தொல்பொருள் ஹொபுஸ் வடிவத்தின் படி, புதிய வகை ஹொபுஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அது, உயர் குரலொலி, நடுத்தரக் குரலொலி, தாழ்ந்த குரலொலி ஆகிய மூன்று வகைகளைச் சேர்ந்தது. அதன் வடிவம், மங்கோலிய இன மக்களின் பழக்க வழக்கத்துக்கு ஏற்றது. அத்துடன் குரலொலியின் அளவும் அதிகரித்துள்ளது.

பெய்சி ஆஸ்ழ் எனும் மங்கோலிய இன இசையைக் கேட்டு மகிழுங்கள்.