தொங்புலா
中国国际广播电台

தொங்புலா

தொங்புலா என்பது கஸக் இன மக்களின் பழமை வாய்ந்த நரம்பிசைக் கருவியின் பெயர். ஹாசாக் இன மொழியில், தொங் என்பது இசைக்கருவியின் ஒலி. புலா என்பது, இசைக்கருவியின் ஒலி அளவை நிர்ணயிப்பது.

தொங்புலா என்னும் இசைக்கருவி நீண்ட வரலாறுடையது. கி.மு. 3வது நூற்றாண்டில் சீனாவின் சிங்ஜியாங்கில் பரவியது. அது வெட்டு மரத்தால் தயாரிக்கப்பட்டது. அதன் வடிவம், பெரிய அகப்பை போன்றது. இவ்விசைக்கருவி, கஸக் நாட்டுப்புறப் பாடகர் மிகவும் விரும்பும் இணை இசை தருகிறது. இத்தகைய இசைக்கருவி இருப்பதால், கஸக் மக்கள் ஆடு மாடுகளை மேய்க்கும் போது தனிமையை உணர்வதில்லை. அந்திப்பொழுதில் வீடு திரும்பிய பின், தொங்புலாவை மீட்டிய வண்ணம் ஆடிப் பாடி, குடும்பத்தினருடன் இணைந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம்.

இவ்விசைக்கருவி, தனிக்குரல் இசை, கூட்டுக்குரலிசை அல்லது இணைக்குரலிசையாகப் பயன்படுத்தப்படலாம். இதை மீட்டும் வழிமுறை மற்ற பெரும்பாலான நரம்பிசைக் கருவிகளைப் போன்றது. அதாவது, இவ்விசைக்கருவியை மார்புக்கு முன் வைத்து, இடது கையால் இதை ஏந்திய வண்ணம், சுட்டு விரல் மற்றும் பெரு விரல்களால் தந்தியைத் தொட்டு, வலது கையின் நடுத்தர விரல் மற்றும் பெரும் விரல்களால் தந்தியை மீட்டுவதாகும். இவ்விசைகருவியை இயக்குவதன் மூலம், புல் வெளியில் நீரூற்று சலசலவென்று ஓடும் நீரின் சத்தத்தையும் பறவையின் குரலொலியையும் ஆடுகளும் மாடுகளும் வேகமாக ஓடும் சத்தத்தையும் தத் ரூபமாக வெளிப்படுத்தலாம்.

பிறப்பிட நினைவு என்னும் இசையைக் கேளுங்கள்.