ஆவ்ஹு
中国国际广播电台

ஆவ்ஹு

ஆவ்ஹு எனப்படும் இசைக்கருவி, சீனாவின் புகழ்பெற்ற இழுத்தல் இசைக்கருவி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான தாங் வமிசத்தில் இது தோன்றியது. அப்போது, வட மேற்கு சீனாவின் சிறுபான்மை தேசிய இன மக்களிடையில் இவ்விசைக்கருவி முக்கியமாகப் பரவியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வளர்ச்சி வரலாற்றில் இவ்விசைக்கருவி, சீனாவின் இசை நாடகத்துக்கு இணை இசையாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றது.

இவ்விசைக்கருவியின் அமைவு எளிமாயானது. வெட்டுமரத்தால் தயாரிக்கப்பட்ட தண்டு, சுமார் 80 சென்ட்டி மீட்டர் நீளமுடையது. தண்டில் இரண்டு தந்திகள் உள்ளன. தண்டின் கீழ் கோப்பை வடிவ குழல் உள்ளது. குதிரை வால் மயிரால் தயாரிக்கப்பட்ட வில்லும் உள்ளது. இசைக்கலைஞர், அமர்ந்த வண்ணம் இவ்விசைக்கருவியை இயக்குவார். இடது கையால் இதை ஏந்திய வண்ணம், வலது கையால் வில்லை பிடிப்பார். ஆவ்ஹுவின் இசை ஒலி மனிதரின் குரலொலியுடன் நெருங்கியது. இதை சீன வயலின் என சிலர் சொல்கின்றனர். இவ்விசைக்கருவியின் ஒலி கேட்கும் போது சற்று துன்பமாக இருப்பதால், சோக உணர்ச்சியை இதன் மூலம் வெளிப்படுத்துவது தகுந்தது.

1949ஆம் ஆண்டுக்குப் பின் இவ்விசைக்கருவின் தயாரிப்பு, சீரமைப்பு, அரங்கேற்றக் கலை ஆகியவை வளர்ந்துள்ளதால், அது தனி இசைக்கும் பயன்படுத்தலாம். பாடல், நடனம், இசை நாடகம், உரையாடல் மற்றும் பாடல் ஆகியவற்றுக்கும் இணை இசையாகப் பயன்படுத்தப்படலாம். சீனாவின் தேசிய இன குழல் மற்றும் நரம்பிசைக் குழுவில் இவ்விசைக்கருவி முக்கிய இசைக்கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலை நாடுகளின் குழல் மற்றும் நரம்பிசைக் குழுவில் வயலின் போன்ற பங்கு ஆற்றிவருகின்றது.

இவ்விசைக்கருவியின் தயாரிப்பு எளிமையானது. விலை மலிவு. கற்றுக்கொள்வது சுலபம். ஒலி இனிமையானது. இதனால், சீன மக்கள் இதை மிகவும் விரும்புகின்றனர். சீன மக்களிடையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவி இது.

 

மலையில் பறவைக் குரல் என்னும் இசையைக் கேளுங்கள்.