ஹொகுவான்
中国国际广播电台

ஹொகுவான்

ஹொகுவான் சொகுவாய் என்றும் அழைக்கப்படுகின்றது. ஹொகுவான் எனப்படும் ஒரு வகை இசைக்கருவி, சீனாவின் நாட்டுப்புற இசைக்கருவியான குழாய் இசைக்கருவியின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இரட்டை காற்று அசைவு இசைக்கருவியாகும். அது துவக்கக்காலத்தில் குவாங்துங் மாநிலத்தின் தெருவில் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் ஆண்டின் முடிவில், குவாங்துங் இசையிலும் குவாங்துங் இசை நாடகத்திலும் பயன்படுத்தப்படத் துவங்கியது. இதற்குப் பின்னர், குவாங்துங், குவாங்சி ஆகிய இரண்டு பிரதேசங்களில் அது பரவிவருகின்றது.

ஹொகுவானின் அமைப்பு மிகவும் எளிமையானது. அது, சீழ்க்கை, குழாய், ஒலிபெருக்கி ஆகிய 3 பகுதிகளைக் கொண்டது. அதன் சீழ்க்கை நாணலால் தயாரிக்கப்பட்டது. அகலமானது. அதன் குழாய், மூங்கில் அல்லது மரத்துண்டு அல்லது பிளாஸ்டிக் குழாய் அல்லது உலோகக் குழாயால் தயாரிக்கப்பட்டது. இதில், மூங்கில் குழாயின் ஒலி தலை சிறந்தது. குழாயின் மேல் 7 துவாரங்கள் உள்ளன. அதன் கீழ் பகுதியில் மெல்லிய செம்புவால் தயாரிக்கப்பட்ட ஒலி பெருக்கி உள்ளது. இதன் விளைவாக, இவ்விசைக்கருவியின் ஒலி பெரிதாக, அழகாக ஒலிக்கும்.


சீனாவின் தேசிய இன இசைக்குழுவில், அடிக்கடி பயன்படுத்தப்படும் ஹொகுவான் என்னும் இசைக்கருவியில், G ராகத்திலுள்ள மத்திம ஒலி இசைக்கருவியும் D ராகத்திலுள்ள கீழ் ஒலி இசைக்கருவியும் உளளன. G ராகத்திலுள்ள மத்திம ஒலி இசைக்கருவியின் முழு நீளம் 53 சென்டி மீட்டர் ஆகும். அதன் விட்டம் 1-1.3 சென்டி மீட்டர் ஆகும். அதற்கு 8 ஸ்வரங்கள் (pitch) உண்டு. அதனுடன் ஒப்பிடும் போது, D ராகத்திலுள்ள கீழ் ஒலி இசைக்கருவி சற்று நீளமானது. அது சுமார் 85 சென்டி மீட்டர் ஆகும். விட்டம் 1.4 முதல் 1.7 வரை சென்டி மீட்டர் ஆகும். இத்தகைய இசைக்கருவியின் ஒலி வீச்சு அளவு குறுகியது. ராகம் மாறுவது கஷ்டம். 20ஆம் நூற்றாண்டின் 60ஆம் ஆண்டுகளில், சீனாவின் இசை தயாரிப்பாளர், புதிய வகை ஹொகுவான் தயாரித்துள்ளனர். இத்தகைய இசைக்கருவியில் 18 அல்லது 19 துவாரங்கள் உள்ளன. அது அரை ஒலியை ஏற்படுத்தலாம். ராகத்தையும் மாற்றலாம். ஒலி வீச்சு அளவும் அதிகரித்துள்ளது. இவ்விசைக்கருவி, தனியொலி இசைக்கருவியாக மாறியுள்ளது. அது, மத்திம ஒலி, கீழ் ஒலி உள்ளிட்ட பல ஒலிகளைக் கொண்டது.

வசந்த காற்றும் மழையும் என்னும் இசையைக் கேட்டுமகிழுங்கள்.