சியொ
中国国际广播电台


சியொ

சியொ, துன்சியொ என்றும் அழைக்கப்படுகின்றது. சீனாவின் தொன்மை வாய்ந்த காற்று அசைவு இசைக்கருவி இது. சீன மொழியில் துன் என்றால் துவாரம் என்று பொருட்படுகின்றது. சியொ என்றால் ஒரு இசைக்கருவியின் பெயர். இதை ஊதும் போது, இவ்விசைக்கருவியை நேராகப் பிடித்த ஊதி, இரண்டு கைகளின் விரல்களால் துளைகளை மூடி மூடித் திறக்கும் போது ஒலி ஏற்படுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், சீன மக்களிடையில் இது பிரபலமாக இருந்தது. அதன் வரலாறு, பெய்சியொவுடன் தொடர்புடையது. சீன மொழியில் பெய் என்ற சொல், வரிசை என்று பொருள்படுகின்றது. இதனால், பெய்சியொ, சீன மொழியில் வரிசையான சியொ என்று பொருள்படுகின்றது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பெய்சியொ தோன்றிய போது, சியொ என்று அழைக்கப்பட்டது. ஒரு குழாயில் வெவ்வேறு தொலைவுகளில் துளை போட்டால், வெவ்வேறு வகை ஒலி எழும்பும் என்பதை பெய்சியொ என்னும் இசைக்கருவியை மக்கள் ஊதும் போது கண்டுபிடித்தனர். இதனால், சியொ எனப்படும் இசைக்கருவி, பல குழாய்களால் உருவாக்கப்பட்ட பெய்சியொ என்பதில் இருந்து படிப்படியாக பல துளைகளைக் கொண்ட ஒரு குழாய் உள்ள சியொவாக மாறிவிட்டது.

இன்று பயன்படுத்தப்படும் சியொ, ஹெங் வமிசக் காலத்தில் தோன்றியது. அப்போது, சியாங்தியெ என்று அழைக்கப்பட்டது. இது, சீனாவின் சிசுவான், கான்சு ஆகிய மாநிலங்களில் வாழும் சியாங் இன மக்களால் இசைக்கப்படும் இசைக்கருவியாக இருந்தது. கி.மு. முதலாவது நூற்றாண்டில் சீனாவின் மஞ்சள் ஆற்றுப் பள்ளத்தாக்கில் பரவியது. காலப்போக்கில், அது 6 துளைகளுடன் கூடிய இசைக்கருவியாக மாறி,இன்றைய சியொ எனப்படும் இசைக்கருவி போல உள்ளது.

சியொ எனப்படும் இசைக்கருவியின் அமைப்பு எளிமையானது. அதன் வடிவம், புல்லாங்குழல் போன்றது. அது மூங்கிலால் தயாரிக்கப்பட்டது. புல்லாங்குழலை விட இது சற்று நீளமானது. அதன் நுனியில் மூடப்பட்டிருக்கின்றது. மூடப்பட்டிருக்கும் பகுதியின் எல்லையில் ஒரு துளை உள்ளது. இவ்விசைக் குழாயில் 5 துளைகள் உள்ளன. அதன் எதிர் பக்கத்தில் மற்றொரு துளை உள்ளது. தவிர, இன்னும் 3, அல்லது 4 துளைகள் உள்ளன. இத்துளைகள், இசை அளவையை சரிப்படுத்துவதற்கும் ஒலியை அழகுப்படுத்துவதற்கும் ஒலியைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.

இவ்விசைக்கருவியின் ஒலி இனிமையானது. தனிச்சிறப்பு வாய்ந்தது. இவ்விசைக்கருவியை இசைக்கும் முறை அடிப்படையில் புல்லாங்குழலை இசைக்கும் முறை போல உள்ளது. ஆயினும், மூங்கில் இசைக்கருவியுடன் ஒப்பிடும் போது, அதன் வளைந்துகொடுக்கும் தன்மை குறைவு. இது விறுவிறுப்பான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றதல்ல. நேர்த்தியான, உணர்ச்சிவசமான ராகத்தை இசைப்பதற்கு மட்டும் ஏற்றது. இது, பொதுவாக, எழில் மிக்க இயற்கை காட்சியையும் மனிதரின் உள்ளத்தில் ஏற்படும் உணர்வையும் வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்துவது வழக்கம். இவ்விசைக்கருவி, தனி இசைக்கும், கூட்டு இசைக்கும் பயன்படுத்தப்படும். இது, கிழக்கு சீனா, புஃச்சியென் மாநிலம், குவாங்துங் மாநிலம் ஆகிய இடங்களிலுள்ள நாட்டுப்புற இசைக்கருவிகளில் இடம்பெற்றுள்ளது. சில இடங்களின் உள்ளூர் இசை நாடகங்களுக்கு இது, இணையொலி இசையாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இவ்விசைக்கருவியில் வகைகள் அதிகம்.

பாலைவனத்தில் பிங்சா காட்டு வாத்து என்னும் இசையைக் கேளுங்கள். காட்டு வாத்துக்கள் ஆகாயத்தில் சுற்றிப் பறக்கும் நிலைமையை இது வர்ணிக்கின்றது.