லோ
中国国际广播电台

லோசேகண்டி

லோ என்பது ஒரு வகை தாள இசைக்கருவியின் பெயர். தமிழ் மொழியில் சேகண்டி என்று அழைக்கப்படுகின்றது. சீனாவின் பாரம்பரிய தாள இசைக்கருவி இது. சீனாவின் தேசிய இன இசைக்குழுவில் முக்கிய இடம் வகிக்கும் இவ்விசைக்கருவி பரந்த அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தேசிய இன இசைக்குழுவிலும் நாட்டுப்புற இசைக்கருவிகளின் கூட்டு இசைக்கும் பல்வகை இசை நாடகங்கள், கதைப்பாடல், ஆடல்-பாடல் ஆகியவற்றில் இணைக்குரலிசைக்கும் ஆதரவாகப் பயன்படுத்தப்படுவதுண்டு. தவிர, கொண்டாட்டங்கள், டிராகன் படகு ஓட்டும் போட்டி, அறுவடை விழா, உழைப்புப் போட்டி முதலியவற்றில் இன்றியமையாத இசைக்கருவி இது.

மூலப்பொருட்கள் வேறுபட்டதால், சீனாவின் தாள இசைக்கருவிகள் உலோகம், மூங்கில் உள்ளிட்ட மூன்று வகைகளைக் கொண்டவை. லோ, உலோக வகையைச் சேர்ந்த தாள இசைக்கருவியாகும். செம்பு வார்த்து பின் தயாரிக்கப்பட்டது. இதன் கட்டமைப்பு எளிமையானது. இசைப்பவர் மரக்குச்சியால் லோவின் நடுப்பகுதியில் அடித்தால் ஒலி எழுப்பும்.

  

தென் மேற்கு சீனாவில் வாழும் சிறுபான்மை தேசிய இன மக்கள் இவ்விசைக்கருவியை முதன் முதலில் பயன்படுத்தினர். சுமார் கி.மு 2வது நூற்றாண்டில், பல்வேறு தேசிய இனப் பண்பாட்டுத் தொடர்புகள் அதிகரித்து, லோ, நாட்டின் உள்ளூர் வட்டாரங்களில் பரவத் துவங்கியது. அப்போது, போரில் லோ அதிக அளவில் பயன்பட்டது. பண்டை கால ராணுவ அதிகாரிகள், லோவைக் கொண்டு போருக்கு ஆணை பிறப்பித்தனர். தங்கம் தட்டு படையினரை விலக்கிக்கொள்ளுதலென்ற சீனாவின் பண்டை கால ராணுவ மொழியில் இடம்பெறும் தங்கமானது, பண்டை கால லோ என்பதாகும்.

நீண்ட காலமாக, வேறுபட்ட வட்டாரங்களிலும் இடங்களிலும் லோ பயன்பட்டுவருவதால், சுமார் 30 வகை லோகள் உள்ளன. இவற்றில் பெரிய லோவும் சிறிய லோவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் இரண்டு வகைகளாகும்.

பெரிய லோவின் விட்டம் 30 முதல் 100 வரை சென்டி மீட்டர் ஆகும். அதன் ஒலி பெரியது. அதிர்வு ஒலி நீளமானது. பெரிய இசைக் குழுவில், அது ராகத்தை வலுப்படுத்துகிறது. இசை நாடகத்தில் அது, கதா நாயகியின் மனச்சார்பைப் பிரதிபலித்துள்ளது.

சிறிய லோவின் விட்டம் 21 முதல் 22.5 சென்டி மீட்டர் உடையது. அது, உச்ச ஒலி, மத்திம ஒலி, கீழ் ஒலி ஆகிய மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சிறிய லோ, அதிக அளவில் பயன்படுத்தப்படும் இணைக்குரலிசைக்கருவியாகும். குறிப்பாக, அது பீகிங் ஆப்பரா மற்றும் உள்ளூர் இசை நாடகங்களில் பயன்படுத்தப்படுவது வழக்கம். கதைப்பாடல், நவீன நாடகம், காற்று இசை மற்றும் அடித்தல் இசைக் குழு, நாட்டுப்புற நடனம் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுவதுண்டு.

வலைப்பின்னலை விரித்து மீன் பிடிப்பது என்னும் இசையைக் கேட்டுமகிழுங்கள்.