குவ்
中国国际广播电台

குவ் drum குவ்

குவ் என்பது ஒரு வகை இசைக்கருவியின் பெயர். தமிழில் இது குவ் என்று அழைக்கப்படுகின்றது. சீனாவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் தாள இசைக்கருவி இது. சீனாவில் முன்னதாகத் தோன்றிய இசைக்கருவியாகும். இதுவரை தோண்டியெடுக்கப்பட்ட தொல்பொருட்களைப் பார்க்கும் போது, அது சுமார் மூவாயிரம் வரலாறுடையது. பண்டை காலத்தில், வழிபாடு, இசை நடனம் ஆகியவற்றில் இது பயன்பட்டது. அது மட்டுமல்ல, எதிரிகளைத் தாக்குவதிலும் கொடூரமான விலங்குகளை அழிப்பதிலும் நேரம், விழிப்பு ஆகியவற்றை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. சமூக வளர்ச்சியுடன், குவ் மேலும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவருகின்றது. தேசிய இன இசைக்குழு, பல்வகை நாடகம், கதைப்பாடல், ஆடல்-பாடல், டிராகன் படகு விடும் போட்டி, கொண்டாட்டங்கள், உழைப்புப் போட்டி ஆகியவற்றிலும் குவ் இன்றியமையாதது. அதன் அமைவு எளிமையானது. பொதுவாக விலங்குகளின் தோலால் குவ்வை மூடிக்கட்டி, தட்டுவது அல்லது அடித்தல் மூலம் ஒலி எழுப்பலாம். சீனாவில் குவின் வகைகள் அதிகம். அவை, யௌ குவ், மேளம், பூக்கல குவ் முதலியவையாகும்.

யௌ குவ் என்னும் இசைக்கருவியின் நடுப்பகுதி பெரியது. அதன் இரண்டு நுனிகள் சிறியது. குழல் போன்ற உள்ளீடற்ற வடிவம். இரண்டு பக்கங்களிலும் மாட்டுத் தோல் அல்லது குதிரை தோலால் மூடப்பட்டிருக்கின்றது. இதன் ஒரு பக்கதில் இரண்டு வளையங்கள் உள்ளன. வளையங்களைக் கயிற்றால் கட்டி இழுத்துக்கட்டப்பட்டுள்ளது. யௌ குவ்வை 4 அளவுகளில் பெரிய மற்றும் சிறிய வகைகளைக் கொண்டது. அதன் ஒலி தெளிவானது. அது, நாட்டுப்புற யாங்கொ பாடல்-நடனத்தில் இணைக்குரலிசையாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். நடன-இசையில் இணைக்குரலிசையாகப் பயன்படுத்துவதுண்டு. அத்துடன், நடனக் கலைஞரின் இசைக்கருவியாகவும் இது பயன்படுத்தப்படுகின்றது. நிகழ்ச்சியை அரங்கேற்றும் போது, யௌ குவ்வை உடம்பின் இடுப்பில் சாய்வாக வைத்து, இரண்டு கைகளால் குச்சியால் அடிப்பதால் ஒலி எழும்புகிறது.

புலிப் பல மோதுதல் என்னும் இசையைக் கேளுங்கள்.