சுற்றுலா வளங்கள்

中国国际广播电台

சீனா, பரவலான நிலப்பரப்பு, அழகான மலை, ஆறு, வளமான பண்பாடு, ஆகியவற்றைக் கொண்ட ஒரு நாடு. வேறுபட்ட பழக்க வழக்கங்களுடைய தேசிய இனங்கள் இங்கு வாழ்கின்றன. உள்ளூர் உற்பத்தி பொருட்களும் நுணுக்கமான செய்முறையும் பாராட்டத்தக்கவை. சீன உணவு வகைகள் உலகில் புகழ்பெற்றவை. சீனாவில் சுற்றுலா வளம் செழிப்பானது, அது பெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் விரிவான வளர்ச்சி வாய்ப்பினையும் கொண்டது. சீனப் பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு திறப்பு பணியின் விரிவாக்கத்தால், சுற்றுலாத் துறை, பொருளாதார வளர்ச்சியின் புதிய மையமாக மாறியுள்ளது. தற்போது, பல்வேறு இடங்களில் சுற்றுலாத் தலங்கள் இடைவிடாமல் அதிகரித்துவருகின்றன. அடிப்படை வசதிக்கான கட்டுமானம் இடைவிடாமல் முழுமையாகின்றது. சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு பெருகிவருகின்றது.

சீனாவில், பல்வகை சுற்றுலா தலங்கள் உள்ளன, துர்பான் வடிநிலத்தின் ஏர்தின் ஏரியின் அடிப் பகுதி, கடல் மட்டத்துக்கு கீழ் 155 மீட்டர் ஆழத்தில் இருக்கின்றது. ஆனால், உலகின் முதலாவது மலை சிகரமான ஜோங்மு லுங்மா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8848.13 மீட்டர் உயரத்தில் உள்ளது அவற்றின் உயர வித்தியாசம் 9003 மீட்டராகும். இது உலகின் வேறு எந்த இடத்திலும் இது போல இல்லை. மேலும், காலநிலையும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, ஹேங்துவான் மலைப் பிரதேசத்தில் நான்கு பருவங்களும் வேறுபட்ட வானிலையும் தெளிவாகக் காணப்படுகின்றன.

உலக நாகரிகத்தின் ஒரு தோற்றுவாயாக சீனா திகழ்கின்றது. அதற்கு சிறப்புமிக்க வரலாறும் பண்பாடும் உண்டு. இன்றுவரை சிதையாமல் பாதுகாக்கப்படும் மதிப்புக்குரிய மரபுச்செல்வங்கள் அரிய சுற்றுலா வளங்களாக மாறியுள்ளன. நவ சீனா நிறுவப்பட்ட 1949ஆம் ஆண்டுக்குப் பின், சீனாவின் 34 மாநில நிலை நிர்வாகப் பிரிவுகளில் 29 இல் பழைய கற்காலக் கட்ட சிதிலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பல வரலாற்று சிதிலங்களில், சின் சி குவாங் எனும் பேரரசர் கல்லறையில் கண்டறியப்பட்ட போர்வீரர்களின் சுடுமண் உருவசிலைகளும் செம்பு குதிரை வண்டியும் உலகில் 8வது அற்புதம் என அழைக்கப்படுகின்றன. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள சுடுமண் போர்வீரர் அருங்காட்சியகம் ஆண்டுதோறும் பத்து லட்சம் பயணிகளை ஈர்த்துள்ளது. துன்குவாங் மோகௌகு குகையிலான சுவர் ஓவியங்கள் உலக கலை களஞசியம் என போற்றப்படுகின்றது. உலக புகழ்பெற்ற சீனப் பெரும் சுவர், சீனாவுக்கு வருகை தரும் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். தவிர, சீனாவில் வாழும் 56 தேசிய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்றுப் பண்பாடும் பழக்க வழக்கங்களும் உண்டு. இவையனைத்தும் மக்களின் கவனத்தை கவரும் கலை மற்றும் பண்பாட்டு காட்சியாக உருவெடுத்துள்ளன.