சீனக் காய்கறிகள் அறிமுகம்

中国国际广播电台


சீனக் காய்கறிகள் பல தொகுதிகளாக பிரிக்கப்படுகின்றன. அவற்றில் ஷான்துங், சுச்சுவான், குவாங்துங், புச்சியன், கியாங்சு, செக்கியாங், ஹுனான், ஆன்ஹுய் ஆகிய மாநிலங்களின் காய்கறி வகைகள் மிகவும் புகழ்பெற்றவை, இவை சமூகத்தில் பொதுவாக ஏற்றக்கொள்ளப்பட்டவை ஆகும்.

ஒரு கறிகள் தொகுதியின் உருவாக்கம், அதன் நீண்டகால வரலாறு, தனிச்சிறப்புடைய தயாரிப்புமுறை ஆகியவற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாதது. அதே வேளையில், அந்த வட்டாரத்தின் இயற்கை நில அமைப்பு, காலநிலை, மூலப்பொருட்கள், உணவு வழக்கம் ஆகியவையும் அதற்கு தாக்கம் ஏற்படுத்துகின்றன. சிலர் இந்த எட்டு வகை கறித் தொகுதிகளை மனிதர்களாக வர்ணிக்கின்றனர். கியாங்சு, மற்றும் செக்கியாங் மாநிலங்களின் கறிகள் தென் சீனாவிலுள்ள அழகியாக வர்ணிக்கின்றன. ஷான்துங் மற்றும் ஆன்ஹுய் மாநிலங்களின் கறிகள் வட சீனாவிலுள்ள வலிமை மிக்க ஆடவராக கூறப்படுகின்றன. குவாங்துங் மற்றும் புச்சியன் மாநிலங்களின் கறிகள் செல்வமான இளைஞராக கூறப்படுகின்றன. சுச்சுவான் மற்றும் ஹுனான் மாநிலங்களின் காய்கறிகள் அறிவுத் திறன்மிக்க பிரமுகர்கள் என வர்ணிக்கப்படுகின்றன.