விசா பெறுவது பற்றி
中国国际广播电台

சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள, முதலில் விசா பெற வேண்டும். வெளிநாட்டு நண்பர்கள், தமது நாட்டிலுள்ள சீனத் தூதரகம், துணை நிலை தூதரகம் ஆகியவற்றிடம் விண்ணப்பித்து விசா பெறலாம். 9 பேர் அல்லது மேலும் கூடுதலானோர் ஒன்று கூடி சீனா வர விரும்பினால், குழுச் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பிக்கலாம். சென்சென், சூஹை, சியாமென் உள்ளிட்ட பொருளாதார சிறப்பு பிரதேசங்களுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டவர்கள் இந்த இடங்களின் விசா நிறுவனங்களிடம் சிறப்புப் பிரதேச சுற்றுலா விசாவுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். ஹைனான் மாநிலத்துக்குச் செல்லும் பயணிகள் அங்கு 15 நாட்களுக்குள் தங்க முடியும். ஹை கௌ, அல்லது சன்யா நகரங்களில் தற்காலிக நுழைவு விசாவை பெறலாம். ஹாங்காங்கிலுள்ள வெளிநாட்டவர்கள் சென்செனுக்கு போனால் 72 மணிநேரத்துக்கு விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டாம். சுற்றுலா விசாவைக் கொண்டு சீனா வரும் வெளிநாட்டவர் வெளிநாட்டவருக்கான நுழைவாயில் மூலம் அல்லது குறிப்பிடத்தக்க நுழைவாயில் மூலம் எல்லை காவல் சோதனை சாவடியின் அனுமதியை பெற்ற பின் நுழையலாம்.

சீனாவில் இருக்கும் போது, தாங்கள் பாஸ்போட், சுற்றுலா விசா ஆகியவற்றைக் கொண்டு, வெளிநாட்டவர்களுக்குத் திறக்கப்படும் பிரதேசங்களில் பயணம் மேற்கொள்ளலாம். சீனாவிலுள்ள வெளிநாட்டவர்களின் சட்டப்பூர்வ உரிமை மற்றும் நலனை சீன அரசு பாதுகாக்கின்றது. ஆனால், நீங்கள் சீனாவில் தங்களின் தகுதிக்கு ஏற்காத நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. எடுத்துக்காட்டாக, வேலை, மதப் பிரச்சாரம், சட்டவிரோதமாக பேட்டி காண்பது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது. இல்லாவிட்டால் நீங்கள் தண்டனை விதிக்கப்படுவீர்கள். அதேவேளையில் சீனாவில் நீங்கள் சீனாவின் சட்டத்தின் படி செயல்பட வேண்டும். சீனாவின் பழக்க வழக்கங்களை மதிக்க வேண்டும்.

விசாவில் விதிக்கப்பட்ட கால வரம்புக்குள் நீங்கள் சீனாவில் பயணம் செய்ய வேண்டும். அதை தாண்டி தொடர்ந்து பயணம் மேற்கொள்ள வேண்டுமானால், நீங்கள் உள்ளூர் காவல் துறையிடம் காலத்தை நீடிக்க விண்ணப்பிக்கலாம். பயணம் முடிவடைந்த பின், நீங்கள் விசா வழங்கிய காலவரம்புக்குள் வெளிநாட்டவருக்கு திறந்துவைக்கப்பட்ட நுழைவாயிலிருந்து எல்லைக் காவல் பரிசோதனை சாவடியால் பரிசோதனை செய்யப்பட்ட பின் சீனாவிலிருந்து வெளியேறலாம்.